புதன், 1 டிசம்பர், 2010

ஸ்பெயினில் பிடிபட்ட தீவிரவாதிகள் லஸ்கர்-இ-தொய்பா அமைப்பின் கைக்கூலிகள்

ஸ்பெயினில் பிடிபட்ட வெளிநாட்டினர்

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 7 கொள்ளையர்கள் பிடிபட்டனர். அவர்களில் 6 பேர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவன் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவன்.

அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட்டுகள், விசா உள்ளிட்ட பயணம் செய்வதற்கான ஆவணங்கள், வெளிநாட்டு பணம் முதலியன நிறைய அளவில் கைப்பற்றப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த பாஸ்போர்ட்டுகள், விசா மற்றும் பணத்தை, பார்சிலோனா நகருக்கு சுற்றுலா வந்திருந்த பயணிகளிடம் இருந்து அவர்கள் கொள்ளையடித்தது தெரிய வந்தது.

லஸ்கர்-இ-தொய்பாவின் கைக்கூலிகள்

அவர்களிடம் ஸ்பெயின் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள், பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் கைக்கூலிகள் என்பது தெரிய வந்தது. விசாரணையில் கிடைத்த திடுக்கிடும், அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வருமாறு:-

பிடிபட்ட 7 பேரும், மும்பையில் நடந்த தாக்குதல் உள்பட பல்வேறு தீவிரவாத செயல்களை சர்வதேச அளவில் நடத்தி வரும் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளுக்காக, சுற்றுலா வரும் பயணிகளிடம் பாஸ்போர்ட்டுகள், விசா உள்ளிட்ட பயண ஆவணங்களை திருடுவார்கள்.

அந்த ஆவணங்களை அவர்கள் தாய்லாந்து நாட்டுக்கு அனுப்புவார்கள். அங்கு அவை, லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளுக்காக, அவர்களின் பெயர்களில் போலியாக வேறு பாஸ்போர்ட்டுகளாகவும் விசாக்களாகவும் மாற்றி, தீவிரவாத அமைப்புகளுக்கு அனுப்பப்படும்.

பயணிகளிடம் கொள்ளை

தீவிரவாதிகள் பிற நாடுகளில் ஊடுருவ வசதியாக, அவர்களின் வயது மற்றும் நாட்டை ஒத்த பயணிகளிடம் இருந்து இந்த ஆவணங்களையும், பணத்தையும் அவர்கள் கொள்ளையடிப்பார்கள்.

தீவிரவாதிகளை பிடிக்க சர்வதேச அளவில் வேட்டை நடந்தது. அப்போது தாய்லாந்து நாட்டில் சில நாட்களுக்கு முன்பு 2 பாகிஸ்தானியர்களும், ஒரு தாய்லாந்து நாட்டுக்காரரும் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஸ்பெயின் உள்பட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து கொண்டு சில தீவிரவாத குழுக்கள் செயல்படுவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஸ்பெயினில் இந்த வேட்டை நடந்தது. அப்போது இவர்கள் பிடிபட்டனர்.

மேற்கண்ட தகவல்கள் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாக, ஸ்பெயின் நாட்டின் உள்துறை அமைச்சகம் வெள்ளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பறிமுதல்

இதைத்தொடர்ந்து, அவர்களின் வீடுகளில் ஸ்பெயின் போலீசார் சல்லடை போட்டு தேடினார்கள். அங்கு, ஏராளமான அடையாள அட்டைகள், கம்ப்ïட்டர் ஹார்ட் டிஸ்க்குகள், மெமரி ஸ்டிக்குகள், 50 செல்போன்கள் மற்றும் ஏராளமான சிம் கார்டுகள், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள், இங்கிலாந்து பவுண்டுகள், ïரோ நோட்டுகள் முதலியன இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல