புதன், 1 டிசம்பர், 2010

ஜனாதிபதியின் உரை ரத்து

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒக்ஸ்போர்ட்டில் இன்று ஆற்ற இருந்த சிறப்பு உரை இரத்துச் செய் யப்பட்டுள்ளதாக ஒக்ஸ்போர்ட் யூனியன்அமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு தனது இணையத்தளத்தில் ஒரு அறிவித்தலை வெளியிட்டிருந்தது. இந்த உரையை ஆற்றுவதற்காக இலங்கை ஜனாதிபதி பிரிட்டனுக்கு வந்ததை பிரிட்டனில் வாழும் தமிழர்கள் வன்மையாகக் கண்டித்து விமான நிலையத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியிருந்தார்கள்.

இன்று உரையாற்றவிருந்த மன்றத்தின் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ் அமைப்புகள் சிலவற்றால் அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. இந்த நிலையிலேயே அந்த உரை நிகழ்வு தவிர்க்க முடி யாத காரணங்களால் இரத்துச் செய்யப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியுள்ள ஜனாதிபதி இரண்டாவது தடவையாக இன்று உரை நிகழ்த்த இருந்தமை குறிப்பிடத்தக்கது. 190 வருடகால ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக சரித்திரத்தில் இரண்டு முறைகள் உரையாற்றுவதற்கு அழைக்கப்பட்ட ஒரேயொரு ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்க்ஷ என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாது காப்புக் காரணங்களுக்காகவே அந்த உரை இரத்துச் செய்யப்பட்டதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. இந்த இரத்துக் காரணமாக தாம் வருத்தமடைவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. நடக்கக்கூடிய ஆர்ப்பாட்டங்களின் அளவு பெரிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த உரை பாதுகாப்பாக நடக்கும் என்று தாம் கருதவில்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

கைது இல்லை என்ற வாக்குறுதிக்கு பிறகு இங்கிலாந்து சென்ற ராஜபக்ச

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்த வரும்படி ராஜபக்க்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டவுடன் அவர் அங்கு செல்ல தயாராக இருந்தார். ஆனால் அவர் போர் குற்றச்செயல் அடிப்படையில் யாராவது வழக்கு தொடர்ந்தால் கைது செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் கடந்த மாதம் லண்டன் செல்வதாக இருந்த திட்டத்தை கை விட்டார்.

இதன் பிறகு அவர் இங்கிலாந்து சென்றால் கைது செய்யப்பட மாட்டார் என்று உத்திரவாதம் வழங்கப்பட்டது. இதன் பிறகே அவர் இங்கிலாந்து சென்றார்.

லண்டன் விமானநிலையத்தில் இறங்கிய அவரை லண்டன் போலீசார் முக்கிய பிரமுகர்களுக்கான வழியில் அழைத்து சென்றனர். அப்போது விமான நிலைய வாசலில் நூற்றுக்கணக்கான இலங்கை தமிழர்கள் தங்கள் கைகளில் தமிழ் ஈழ கொடியுடன் கூடி நின்று இருந்தனர். அவர்கள் ராஜபக்சயை பார்த்ததும் போர் குற்றவாளியே திரும்பி போ என்பன போன்ற கோஷங்களை எழுப்பினார்கள்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல