இதை எதிர்த்து, ஷாகீத் இக்பால் என்பவர் லாகூர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இக்பாலின் வக்கீல் அல்லா பக்ஸ் லாகிரி வாதாடுகையில் இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் வழக்கு விசாரணையில் இருக்கும்போது ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி இருப்பது சட்டவிரோதமானது என்று வாதாடினார்.
இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த ஐகோர்ட்டு, சர்தாரிக்கு மன்னிப்பு அளிப்பதில் இருந்து தடை விதித்தது. தீர்ப்பில் கோர்ட்டு கூறி இருப்பதாவது:-
அந்த பெண்ணுக்கு எதிரான சாட்சியங்களை மதிப்பீடு செய்வது கோர்ட்டின் கடமை ஆகும். இது தனிநபரின் வேலை அல்ல. குற்றம்சாட்டப்பட்ட பெண் அப்பாவி என்று தெரியவந்தால் அவர் விடுவிக்கப்படுவார்.
இவ்வாறு கோர்ட்டு தீர்ப்பில் கூறி உள்ளது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக