புதன், 1 டிசம்பர், 2010

சூரியனுக்கு உரிமையாளர் நானே (படம் இணைப்பு)

சூரியனின் உரிமையாளர் தானே என ஸ்பெயினிலுள்ள கலிசியா பிராந்தியத்தைச் சேர்ந்த அஞ்ஜெலஸ் துர்ரான் (49 வயது) என்ற பெண் உரிமை கோரியுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த நபரொருவர் சந்திரனதும் சூரிய மண்டலத்திலுள்ள ஏனைய சில கிரகங்களதும் உரிமையாளர் தானே என பதிவு செய்ததையடுத்தே, அஞ்ஜெலஸ் துர்ரானின் இந்த சூரியனுக்கான பதிவு செய்தல் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் அஞ்ஜெலஸ் துர்ரான் விபரிக்கையில், ““எந்தவொரு நாடும் கோள் ஒன்றையோ அன்றி நட்சத்திரமொன்றையோ உரிமைகோர முடியாது என சர்வதேச உடன்படிக்கையொன்று கூறுகின்ற போதும், அதில் தனிநபர்கள் மேற்படி கோரிக்கையை விடுக்கமுடியாது என்பதற்கு எதுவித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. அதனால் எனது கோரிக்கை சட்டபூர்வமானது. நான் முட்டாளொன்றும் இல்லை. நான் சட்டத்தை அறிவேன்.

என்னைப் பின்பற்றி எவரும் இதனைச் செய்யலாம்'' என்று தெரிவித்தார்.

இதன் பிரகாரம் சட்டபூர்வ சொத்து பதிவு ஆவணத்தில் பூமியிலிருந்து 149,600,000 கிலோமீற்றர் தொலைவில் “ஜி2' வகை கிரகமான சூரியனின் உரிமையாளர் அஞ்ஜெலஸ் துர்ரான் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல