பெர்லுஸ்கொனியின் வாசஸ்தலங்களில் இடம்பெற்ற மேற்படி தனிப்பட்ட விருந்து பசாரங்களில் கலந்து கொள்வதற்கு தனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக “ஸ்கை ஜி 24' ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் நடியா மக்றி கூறினார்.
இந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட பெண்களில் பலர் 18 வயதுக்கு கீழ்ப்பட்ட இளவயதினர் என தான் நம்புவதாக அவர் தெரிவித்தார். இந்த விருந்துபசாரங்களில் கலந்து கொண்டு பாலியல் ரீதியில் தன்னை திருப்திப்படுத்துவதற்காக இத்தாலிய பிரதமர் 14,000 அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை தனக்கு கட்டணமாக வழங்கியதாக நடியா மக்றி ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விலைமாதுகள் மற்றும் இளம் பெண்களுடனான பாலியல் தொடர்பு குற்றச்சாட்டுகளால் சில்வியோ பெர்லுஸ்கொனி எதிர்வரும் இரு வார காலப்பகுதி யில் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பொன்றை எதிர்கொண்டுள்ளார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக