புதன், 1 டிசம்பர், 2010

வந்தது பாம்பல்ல "நீல்' இன மீன்

மட்டக்களப்பு கல்லடி ஆற்றில் ஆயிரக்கணக்கில் பாம்பு வருவ தற்கும் சுனாமி ஏற்படுவதற்கும் சம்பந்தப்படுத்தி வரும் தகவல் களில் எவ்விதமான உண்மையும் இல்லை என மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரி தெரிவித்தார். இது ஒருவித விலங்கு இனத் தைச் சேர்ந்த நீல் எனப்படுகிற மீன் வகையாகும். இதுகுறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

சுனாமி போன்ற அனர்த்தங்கள் ஏற்படுகின்ற வேளைகளில் மக்களுக்கு உடனடியாக அறிவிக்கும் வகையில் அனைத்துவிதமான முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளும் ஏற்பாடு களும் மட்டக்ளப்பு மாவட்டத்தில் ஏற் படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவை யில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளைகளில் இரவு வேளைகளில் வரும் இவை பகலில் வெளிவருவதில்லை. இரவு முழுவதும் நீரில் நீந்தும் எனத் தெரிவித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல