“விக்கிலீக்ஸ்' இணையத்தளம் மூலம் மேற்படி இரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டிலான மேற்படி ஆவணத்தில் வட கொரியா அதிகம் செல்லம் கொடுத்து கெடுக்கப்பட்ட ஒரு குழந்தை போன்று நடந்து கொள்வதாக சீன வெளிநாட்டு உப அமைச்சர் ஹி யபேயி தெரிவித்துள்ளார்.
வட கொரியாவானது தென் கொரியாவின் கட்டுப்பாட்டின் கீழ் மீள இணைய வேண்டும் என்ற கருத்தை சீன அதிகாரிகள் வெளிப் படுத்தியுள்ளனர். தென் கொரிய தீவொன்றின் மீது வடகொரியா தாக்குதல் நடத்தி ஒரு வாரத்திலேயே இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் மேற்படி ஆவண வெளியீடுகள் சம்பந்தமான பிரச்சி னைகளை அமெரிக்கா சரியாக கையாள வேண்டுமென சீனா செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியுள்ளது.
1966 ஆம் ஆண்டுக்கும் 2010 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கும் உலகளாவிய ரீதியிலுள்ள அமெரிக்க தூதரகங்களுக்குமிடையே இடம்பெற்ற தொடர்பாடல்களே விக்கிலீக்ஸ் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
தனக்கு கிடைத்த 251 287 இராஜதந்திர செய்திகளில் 278 செய்திகளை மட்டுமே வெளிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவிக்கிறது.
விக்கிலீக்ஸிற்கு மேற்படி ஆவணங்களை யார் வழங்கினார்கள் என்று கண்டு பிடிக்கப்படாத போதும், அமெரிக்க தனிப்பட்ட இராணுவத்தைச் சேர்ந்த பிரட்லி மானிங் மீதே அனைவரது சந்தேகம் திசை திருப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் கடந்த ஜூன் மாதம் இரகசிய வீடியோ ஒன்றை பகி ரங்கப்படுத்திய குற்றச்சாட்டில் ஈராக்கில் வைத்து கைது செய்யப்பட்டார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக