புதன், 1 டிசம்பர், 2010

இளவரசர் வில்லியம் கேட் மிடில்டன் திருமண நிச்சயதார்த்தத்தால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி (படங்கள் இணைப்பு)

பிரித்தானிய இளவரசர் வில்லியத்திற்க்கும் அவரது காதலி கேட் மிடில்டனுக்கும் இடையிலான காதல் 2007 ஆம் ஆண்டளவில் விரிசல் அடைவதற்கு காரணமாயிருந்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளாகிய யுவதியான லெக்கி லிஸா (23 வயது), இளவரசன் திருமண நிச்சயதார்த்தம் தொடர்பில் மிகுந்த மகிழ்ச்சி யடைவதாக தெரிவித்தார்.
லெக்கி லிஸா ஆகர் - இளவரசர் வில்லியம்
லெக்கி லிஸா ஆகர் களியாட்ட கழகமொன்றில் இளவரசர் வில்லியத்துடன் நடனமாடும் காட்சியை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த புகைப்படங்கள் வெளியாகி இரு வாரங்களுக்கு குறைந்த காலத்தில் வில்லியம் கேட் மிடில்டனும் பிரிய நேர்ந்தது.

எனினும் வில்லியம் பின்னாளில் கேட் மிடில்டனுடனான காதலைப் புதுப்பித்து கொண்டதுடன், அண்மையில் அவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

இந் நிலையில் லெக்கி லிஸா ஆகர் பிரித்தானிய ஊடகத்துக்கு  திங்கட்கிழமை அளித்த பேட்டியில், ““வில்லியம் கேட்டும் தாங்கள் பிரிந்திருந்த காலம் தமது காதலை மென்மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்ததாக தெரிவித்தனர். அவர்கள் இருவரும் இறுதியில் இணைந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகின்றது. அரச குடும்பத்தின் வரலாற்றில் நானும் ஒரு வகிபாகம் வகித்துள்ளமையை நினைத்து மிகுந்த பெருமையடைகிறேன்'' என்று கூறினார்.

““அன்றைய தினம் நான் இளவரசருடனும் அவரது படைவீரரான நண்பருடனும் நடனமாடினேன். இந்த சம்பவத்தையடுத்து வில்லியம் கேட் மிடில்டனும் பிரிந்து விட்டதாக அறிந்து நான் வியப்படைந்தேன். இதனையடுத்து என்னை அவதூறு செய்யும் வகையில் எனது மின்னஞ்சலுக்கு பலரும் செய்திகள் அனுப்பினர். அதில் ஒரு செய்தியில் நான் மரணமடைய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது'' என்று கூறினார்.
லெக்கி லிஸா ஆகர் - ஜேம்ஸ் வூட்ஸ்போர்ட்

தன்னையும் இளவரசர் வில்லியத்தையும் இணைத்து வெளியான கிசுகிசுக்களால் தனது காதலரான ஜேம்ஸ் வூட்ஸ்போர்ட்டை (24 வயது) பிரிய நேர் ந்ததாக கூறிய லெக்கி லிஸா ஆகர், ஆனால் இளவரசர் வில்லியம் கேட் மிடில்டனுடன் மீளவும் இணைந்து கொண்டது போல் தானும் தனது காத லருடன் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

தானும் தனது காதலரும் திருமணம் செய்து ஹன்ட்ஸ் நகரில் றிங்வூட் எனும் இடத்திலுள்ள வீட்டில் வாழத் திட்டமிட்டுள்ளதாக கூறிய லெக்கி லிஸா ஆகர், ““அந்த வீட்டில் சில திருத்த வேலைகள் மேற்கொள்ள வேண்டியுள்ள போதும் எம்மைப் பொறுத்தவரை அது ஒரு மாளிகையாகும்'' என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல