வெள்ளி, 3 டிசம்பர், 2010

டோலிக்கு 4 குட்டிகள்

விஞ்ஞானிகள் குளோனிங் முறையை அறிமுகப்படுத்தியபோது உலகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. இதை மீறி பல சாதனைகளை படைத்து வருகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அந்த வரிசையில் அறிவியல் உலகில் சாதனை படைத்தது 1996ல் குளோனிங் முறையில் பிறந்த டோலி செம்மறி ஆடு.
டோலி
டோலிக்கு தற்போது 14 வயது. அதன் ஜீன்களில் இருந்து குளோனிங் முறையில் மீண்டும் 4 செம்மறி ஆட்டுக்குட்டிகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இங்கிலாந்தின் நாட்டிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கெய்த்கேம்பெல் தலைமையில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் வெற்றி கிட்டியுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கேம்பெல் கூறியதாவது:

குளோனிங் முறையில் உருவான அசல் செம்மறி ஆட்டில் இருந்து 14 ஆண்டுகளுக்கு பின் அதன் ஜீன்களைக் கொண்டே 4 நகல்கள் உருவாக்கப்பட்டுள்ளது. குளோனிங் உலகில் இது முதல் உலக சாதனை. இத்தகைய முறையில் உருவாக்கப்பட்ட உயிரினங்கள் நோய்த்தொற்று, எதிர்ப்புசக்தி குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விரைவில் உயிரிழந்து விடும். 14 வயது டோலியும் அதன் 7வது வயதில் நுரையீரல் தொற்று, ஆர்த்ரைடிஸ் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகி மிகவும் ஆபத்தான நிலையில் இருந்து உயிர்பிழைத்தது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பாதிப்புகளில் இருந்து குளோனிங் முறையில் உருவாக்கப்படும் உயிரினங்களை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஆராய்ச்சியின் வெளிப்பாடாக உருவாக்கப்பட்டவையே தற்போதைய 4 செம்மறிஆட்டுக் குட்டிகளும். இந்த 4 குட்டிகளும் ஒன்றுபோலவே உள்ளது. வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினம்.

தாய் ஆட்டின் பால்மடியில் இருந்து எடுக்கப்பட்ட திசுக்கள் பாதுகாக்கப்பட்டு குட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு பிரபல மேற்கத்திய பாடகர் டோலிபார்ட்டன் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல