வெள்ளி, 3 டிசம்பர், 2010

ஆப்கானிஸ்தானில் கைதான தலீபான் தீவிரவாதிகள் லஞ்சம் கொடுத்தால் அரசாங்கமே விடுவிக்கிறது

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ வீரர்களிடம் பிடிபடும் தலீபான் தீவிரவாதிகளை ஆப்கானிஸ்தான் அரசாங்கம் பணம் வாங்கிக் கொண்டு விடுதலை செய்து வருகிறது.


ஜனாதிபதியே

தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரை கொடுத்து போராடி வருகிறார்கள். இந்த வீரர்கள் தலீபான்களுக்கு எதிராக போர் புரிந்து அவர்களை நிராயுதபாணிகளாக்கி அதன் பிறகு கைது செய்கிறார்கள். இப்படி கைதான தீவிரவாதிகளை ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி கர்சாயோ அல்லது, அவரது சக்தி வாய்ந்த தம்பியோ அல்லது உயர் அதிகாரிகளோ லஞ்சம் வாங்கிக் கொண்டு விடுதலை செய்து வருகிறார்கள்.

லஞ்சம் வாங்கிக்கொண்டு விடுதலை செய்வது திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக தலீபான்கள் ஒரு குழுவை வைத்து உள்ளனர். எந்த எந்த தீவிரவாதியை விடுதலை செய்ய வேண்டும் என்பதை இந்த குழு முடிவு செய்கிறது.

பாதுகாப்பு கேள்விக்குறி

இப்படி லஞ்சத்தின் பேரில் தீவிரவாதிகளை விடுதலை செய்யப்படுவது பல்வேறு மட்டங்களிலும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த பழக்கம் காரணமாக ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் திறன் பாதிக்கப்படும். அரசியல் உறுதி கேள்விக்குறியாக உள்ளது.

அடுத்த ஆண்டு ஜுலை மாதம் முதல் அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற இருக்கிறது. அதன் பிறகு அந்த நாட்டின் பாதுகாப்பு ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும். ஆனால் லஞ்சம் வாங்கும் பழக்கம் நாட்டின் பாதுகாப்பை கேலிக்குரியதாக்கி உள்ளது.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டு வேண்டுமானால், காந்தார் நகரை சேர்ந்த குலாம் ஹைதர் என்ற தீவிரவாதியை சொல்லலாம் என்று அமெரிக்க ராணுவத்தினர் கூறுகிறார்கள்.

கைதானவர் விடுதலை

குலாம் ஹைதரை கனடா நாட்டு ராணுவம் கைது செய்தது. அவர் கடந்த மார்ச் மாதம் ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். சில நாட்கள் கழித்து அவர்கள் கைது செய்த மனிதன் சாலையில் நடந்து செல்வதை கனடா நாட்டு ராணுவத்தினர் பார்த்தனர். இது பற்றி விசாரணை நடத்திய போது அவர் கைதான ஆவணம் எதுவுமே கிடைக்கவில்லை. விடுதலையான ஹைதர் தலீபான் இயக்கத்தை சேர்ந்த முக்கியமான தளபதிகளில் ஒருவர் ஆவார். இவரை விடுதலை செய்யும்படி கர்சாயின் தம்பி அகமது வாலி கர்சாய் தான் உத்தரவிட்டார் என்று கூறப்படுகிறது. அகமது வாலி காந்தகார் மாநில கவுன்சில் தலைவர் ஆவார்.

இது பற்றி உள்துறை அமைச்சரகத்திடம் கேட்ட போது, தலீபான்கள் விடுதலை செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் எங்களிடம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல