வெள்ளி, 3 டிசம்பர், 2010

இலங்கை போர் குற்றங்களுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பு - அமெரிக்கா நம்புவதாக விக்கிலீக்ஸ் தகவல்

இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கு அரசாங்கமே பொறுப்புபென அமெரிக்க ராஜதந்திரிகள் நம்புவதாக அண்மையில் வெளியிடப்பட்ட விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவித்ததாவது, இவ்வருடம் ஜனவரி 15 ஆம் திகதி கொழுபிலுள்ள அமெரிக்க தூதுவர் பற்றிசியா புட்னிஸ் அனுப்பி வைத்த தகவல்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் இப் படுகொலைகளுக்கு பெருமளவில் பொறுப்பு வகிப்பது இப் படுகொலைகள் குறித்த விசாரணைகள் பெருமளவு முன்னேற்றம் இன்றி இருப்பதற்கு காரணம் எனக் கூறியுள்ளார்.

பதவியில் தொடர்ந்து நீடித்திருக்கும் ஒரு அரசு அல்லது ஒரு ஆட்சிக்குழு தனது இராணுவ அதிகாரிகளும் மேற்கொண்ட போர்க் குற்றங் கள் குறித்து தாமே ஒரு முழுமையான விசார ணைகளை மேற்கொண்டதற்கு நான் அறிந்த வரை உதாரணங்கள் ஏதுமில்லை என அமெரிக்க தூதுவர் இக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இவ் விடயம் மேலும் சிக்கலாக இருப்பதற்கு காரணம் நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது சகோதரர்கள், எதிரணி வேட்பாளர் (ஜனவரி 2010) சரத் பொன்சேகா மற்றும் பல மூத்த அதிகாரிகள் இப் போர் குற்றச்சாட்டுகளில் நேரடியாக சம் பந்தப்பட்டிருப்பதுதான். இதில் சரத் பொன்சேகா ஊழல் குற்றச்சாட்டில் தற்போது இராணுவ நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

இப் போரில் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியமை போன்ற போர்க் குற்றச்சாட்டுக்களை விடுதலைப் புலி கள் மீதும் சந்கேம் தெரிவிக்கப்பட்டுள்ளபோதும் இவர்களின் பல மூத்த தளபதிகள் சண்டையின் இறுதியில் கொல்லப்பட்டுவிட்டனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது நாட்டில் யுத்த வீரர்களை சர்வதேச விசாரணை களுக்கும் உட்படுத்த விடமாட்டேன் என தனது தேர்தல் பிரசாரத்தின்போது கூறியிருந்தார்.

இலங்கை அரசு மட்டுமன்றி இலங்கை யில் உள்ள தமிழர்களும் அரசாங்கத்தின் பழி வாங்கல்களுக்கு உள்ளாகலாம் என்ற பயத் தில் இப்பிரச்சினைகள் தொடர்பாக ஆர்வம் இன் றியே உள்ளனர். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மட்டுமே இப் பிரச்சினைகளையிட் டுப் பேசிவருகின்றனர்.நாம் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலுமுள்ள தமிழ்த் தலைவர்களுடன் உரையாடிய அளவில்,

இப்பிரச்சினையையிட்டு இப்போது பேசு வது தமக்கு ஆபத்தாக முடியும் என்பதால் மெளனமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனாலும் எதிர்காலத்தில் இப் போர்க் குற்ற விடயங்களையிட்டு ஏதாவது செய்ய முடியும் என்பதால் இப் பிரச்சினையை அணை யாது வைத்திருக்கவே விரும்புகின்றனர்.எனினும் இந்த விடயங்களுக்குப் பதில் சொல்ல வேண்டியது இலங்கை சமூகத்தின் ஒட்டுமொத்த அரசியல் மற்றும் சமூக நீதிக்கு அவசியமானது.ஆனாலும் இம்மாற்றம் உட னடியாக நடந்து விடும் என நான் நம்பவில்லை என அவர் தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் இணையம் தெரிவித்துள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல