வெள்ளி, 3 டிசம்பர், 2010

முன்னணி உதைபந்தாட்ட வீரரது முதல் மனைவியை படுகொலை செய்த குற்றச்சாட்டில் காதலிக்கு மரணதண்டனை (படங்கள் இணைப்பு)

முன்னணி உதைபந்தாட்டவீரர் ஒருவரது முதல் மனைவியை படுகொலை செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவருக்கு புதன்கிழமை ஈரானில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஷஹ்லா ஜாஹெத் என்ற மேற்படி பெண், தலைநகர் தெஹ்ரானிலுள்ள எவின் சிறைச்சாலையில் அந்நாட்டு நேரப்படி காலை 5.00 மணிக்கு தூக்கிலிடப்பட்டதாக அவரது சட்டத்தரணி தெரிவித்தார். இந்த வருடம் மரணதண்டனை நிறைவேற்றத்துக்கு உள்ளானவர்கள் தொகை 146 ஆக உயர்ந்துள்ளது.

அவரது மரணதண்டனை நிறைவேற்றத்தை நிறுத்த சர்வதேச மன்னிப்புச் சபை செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியிருந்தது.

ஜாஹெத் நீதியான முறையில் விசாரணைக்குட் படுத்தப்படவில்லை என அந்த அமைப்பு தெரிவித்திருந்தது.

ஜாஹெத் உதைபந்தாட்டவீரரான நாஸர் மொஹமட் கானியை தற்காலிகமாக திருமணம் செய்து தெஹ்ரான் நகரில் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் 2002 ஆம் ஆண்டில் நாஸர் மொஹமட் கானியின் முதல் மனைவியான லாலெஹ் சஹர்கிஸானை கத்தியால் குத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

முதலில் படுகொலை செய்ததை ஒப்புக் கொண்ட ஜாஹெத், பின்னர் நீதிமன்றத்தில் அதனை மறுத்திருந்தார்.

1980 களில் ஈரானின் முன்னணி உதைபந்தாட்ட வீரராக மொஹமட் கானி விளங்கினார். தனது காதலியான ஜாஹெத்துடன் சேர்ந்து போதைவஸ்தை உபயோகித்த குற்றச்சாட்டில் அவருக்கு 74 கசையடி தண்டனையை நீதிமன்றமொன்று விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜாஹெத் படுகொலைக் குற்றச்சாட்டை ஒப்புக் கொள்வதற்கு முன்னர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மொஹமட் கானி பல மாதங்களை சிறையில் கழிக்க நேர்ந்தது. 9 வருடங்களிற்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த அவரை விடுதலை செய்ய மனித உரிமை அமைப்புகள் பலவும் வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல