வெள்ளி, 3 டிசம்பர், 2010

அடுத்த வீட்டுக்காரரை அறியாமல் வாழும் அவுஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவில் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்கள் குறித்து எந்தவொரு தகவலும் 60 சதவீதம் பேருக்கு தெரிவதில்லை என்று ஆய்வு தெரிவிக்கிறது.

இன்றைய அவசர உலகில் ஒருவரையொருவர் சந்தித்தித்து பேசுவது என்பது குறைந்து வருகிறது. அதிலும் பக்கத்து வீட்டுகாரர் யார் என்று தெரியாத நிலைகூட உள்ளது. இத்தகைய நிலைபற்றி ஆஸ்திரேலியாவில் லைப் இதழ் 2,100 பேரிடம் ஆய்வு நடத்தியது.

அதில் பக்கத்து வீட்டுகாரர்களிடம் பேசுவதில்லை என 59 சதவீதம் பேர், அவர்கள் குறித்து எந்தவொரு தகவலும் தெரியாது என 38 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்தனர்.

 இது குறித்து இதழின் ஆசிரியர் லிண்டா ஸ்மித் கூறுகையில், ஆஸ்திரேலியாவில் முன்பு ஏதேனும் விழாக்களின்போது பக்கத்து வீட்டுகாரர்களுடன் உணவு மற்றும் சிலவற்றை மக்கள் பரிமாறிக் கொண்டனர். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள சமூக மாற்றத்தால் எந்தவொரு நிகழ்ச்சியானாலும் அவரவர் குடும்பத்தினருடன் மட்டும் பகிர்ந்து கொள்கின்றனர் என்று தெரிவித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல