வெள்ளி, 3 டிசம்பர், 2010

பறக்கும் வாகனம் (படங்கள் இணைப்பு)

பறவை போல வானில் ஜிவ்வென்று பறப்பதற்காக வாகனத்தை உருவாக்கியிருக்கிறார்  நியூசிலாந்து விஞ்ஞானி க்ளென். இது அவரது 30 ஆண்டு கால உழைப்புக்கு கிடைத்த வெற்றி.  1961ல் நடந்த முதல்கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்தது.

அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப  அதில் பலப்பல மாற்றங்கள் செய்து சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். இறக்கை அசைத்து பறக்கும் வாகனம் கண்டுபிடிக்கப் போகிறேன் என்று அவர் முதலில் கூறியபோது  உறவினர், நண்பர்கள், சக ஊழியர்கள் கேலி செய்துள்ளனர். அதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல்  ஆராய்ச்சியில் கவனம் செலுத்தியதால் இன்று சாதனையாளனாக நிற்கிறேன் என்று பெருமையுடன்  சொல்கிறார். 

காற்றை கிழித்துக் கொண்டு பறக்கும் வகையில் இலைவடிவில் 2 இறக்கைகள். 200 குதிரைத்  திறன் சக்தி கொண்ட இன்ஜின் உதவியுடன் உந்து விசையை பயன்படுத்தி தடையின்றி பறக்க முடியும்.  நீண்ட தூர பயணத்துக்கு ஏற்ற வகையில் எரிபொருளை வாயு நிலையில் சேமித்துக்கொள்ள முடியும்.

சக்தி  வாய்ந்த இன்ஜின் என்பதால் 8 ஆயிரம் அடி உயரம் வரை பறக்க முடியுமாம். தொடர்ச்சியாக அரை மணி  நேரம் வானிலேயே பறந்து 50 கி.மீ. தொலைவு வரை செல்ல முடியும். நின்று பயணிக்கும் வகையில்  தற்போது வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விலை ரூ.45 லட்சம். மேலும் வசதிகளை சேர்ப்பது குறித்து ஆய்வு  நடந்து வருகிறது. ஆர்டர் கொடுப்பவர்களுக்கு வரும் ஜனவரி முதல் சப்ளை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல