வெள்ளி, 3 டிசம்பர், 2010

பெண்ணின் மூக்கை அறுத்து அவமானப்படுத்தினார்கள்

பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குஜ்ரன்வாலா என்ற இடத்தை சேர்ந்தவர் ஆசியா பீவி. இவர் கணவர் முல்தான் நகரில் தங்கி வேலை செய்து வருகிறார். இதனால் ஆசியா பீவி தன் கணவரது பூர்வீக வீட்டில் அவரது அண்ணன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

அந்த வீட்டில் கணவரின் அண்ணன் அன்வர், அவர் மனைவி கல்சூம், அவர்களின் மகன்கள் வக்கஸ், அவைஸ் ஆகியோர் தங்கி இருந்தனர். ஆசியா பீவியின் கணவர் எப்போதாவது தான் குஜ்ரன்வாலா வீட்டுக்கு வருவார்.

ஆசியா பீவி தன் வீட்டுக்கு அருகில் வசித்த ஒருவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக கூறி அந்த பெண்ணின் மூக்கை அறுத்து அவரது கணவர் குடும்பத்தினர் மானபங்கப்படுத்தினார்கள். அதன் பிறகு அவரை தனி அறையில் 3 நாட்களுக்கு அடைத்து வைத்தனர்.

அதன் பிறகு போலீசுக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் அந்த வீட்டுக்கு சென்று பூட்டை உடைத்து ஆசியா பீவியை விடுவித்தனர். 3 நாட்களாக தனி அறையில் அடைத்து வைத்து விட்டு எனக்கு சரியாக உணவு கொடுக்காமல் பட்டினி போட்டனர். என் மூக்கை அறுத்ததால் ஏற்பட்ட காயத்துக்கு மருந்து கூட போடாமல் ரத்தம் கொட்ட கொட்ட என்னை அடைத்து வைத்தனர் என்று ஆசியா பீவி கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல