அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர் ரொனால்டு டி பினோ தலைமையிலான விஞ்ஞானிகள் எலியை வைத்து நடத்திய ஆராய்ச்சியில் என்றும் இளமையாக இருப்பதற்கான வழிகளை கண்டுபிடித்து உள்ளனர். 80 வயது உள்ள கிழவரை போன்ற தோல் சுருங்கிய உடல் தளர்ந்த எலிக்கு புதிதாக உருவாக்கப்பட்ட இளமை மருந்தை விஞ்ஞானிகள் கொடுத்தனர். 2 மாதங்களில் அந்த எலியின் உடலில் புதிய செல்கள் வளர்ந்து அது புத்துணர்வு பெற்றது.
இந்த இளமை மருந்து மூலம் மனிதர்கள் நீண்டகாலம் ஆரோக்கியமாக உயிர் வாழ்வார்கள், தோல் சுருங்காமல், முடி கொட்டாமல் அவர்கள் உயிர் வாழ்வார்கள் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக