வெள்ளி, 3 டிசம்பர், 2010

அமெரிக்காவிடம் $500 கோடி டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்த பாகிஸ்தானியர்

பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் தலீபான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி இரவு நடந்த தாக்குதலின் போது கரீம் கான் என்பவரின் 18 வயது மகன் ஜயினுல்லா, மற்றும் அவரது தம்பி ஆசிப் இக்பால் ஆகியோர் பலியானார்கள்.

இதை தொடர்ந்து கரீம் கான் அமெரிக்கா மீது $500 கோடி டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இது தொடர்பாக அமெரிக்காவின் ராணுவ மந்திரி ராபர்ட் கேட்ஸ், உளவுத்துறை டைரக்டர் லியோன் பனெட்டா ஆகியோருக்கு கோர்ட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது. இது தொடர்பாக அமெரிக்க தூதரக செய்தி தொடர்பாளர் கூறுகையில் இது தொடர்பாக எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்று குறிப்பிட்டார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல