வெள்ளி, 3 டிசம்பர், 2010

மனித உரிமை ஆணைக்குழுவின் ஊடாக பெண் தொழிலாளியின் பிரச்சினைக்கு தீர்வு

தோட்டத் தொழிலாளியொருவன் பிரச்சினை, மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எடுத்துச் செல்லப்பட்டதையடுத்து, அவ் ஆணைக்குழு தொழிலாளியின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை ஏற்படுத்திக் கொடுத்துள்ள சம்பவம், பதுளையில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

பசறைப் பகுதியைச் சேர்ந்த ஹொப்டன் தோட்டத்தின் ஒரே பெயரைக் கொண்ட இரு பெண் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய ஊழியர் சேமலாப நிதியான நான்கு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாவை ஹொப்டன் தோட்ட காமைத்துவம் அதே பெயருடைய மற்றைய தொழிலாளிக்கு கொடுத்து விட்டது. அப்பணத்தைப் பெற்ற தர்மலிங்கம் தனலட்சுமி என்ற பெண் தொழிலாளி, ஹொக்டன் தோட்டத்தை விட்டு அடாவத்தை என்ற தோட்டத்திற்கும் சென்று விட்டார்.

இதே நிலையில் மருதைவீரன் தனலட்சுமி என்ற பெண் தொழிலாளி தனக்கு சேர வேண்டிய ஊழியர் சேமலாப நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு தமது விண்ணப்பத்தினை தோட்ட காமைத்துவத்திடம் கொடுத்த போது, அவ்விண்ணப்பம் நிராகக்கப்பட்டது.

இதனை ஆட்சேபித்து, அப்பெண் தொழிலாளி இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியில் முறையிட்டார்.

அதைத் தொடர்ந்து அம்முறைப்பாடு பதுளை உதவித் தொழில் ஆணையாளர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அதையடுத்து அப்பிரச்சினை பொலிஸ் நிலையம் மற்றும் இணக்கச்சபை ஆகியனவற்றிற்கும் கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்விசாரணைகள் அனைத்துமே முழுமையாக மேற்கொள்ளப்படாமல் தீர்வினைப் பெறமுடியாதிருந்தது. இறுதியாக இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய ன்னணி யின் ஊவா மாகாண பொறுப்பாளரும் ன் னணியின் பிரதிச் செயலாளருமான இரா. சலோபராஜா இப் பிரச்சினையினை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு எடுத்துச் சென்றார்.

அதனையடுத்து மனிதஉரிமை ஆணைக்குழுவின் சட்ட ஆலோசகர் துசாகா பெர்னாண்டோ இடம்பெற்றிருக்கும் பிரச்சினை தொடர்பாக பல மாதமாக பூரண விசாரணைகளை மேற்கொண்டு நேற்று முன்தினம் தீர்ப்பினை வழங்கினார்.

ஏற்பட்டிருக்கும் தவறு, சம்பந்தப்பட்ட பெண் தொழிலாளர்களினால் ஏற்பட்ட தல்ல. தவறு தோட்ட காமைத்துவத்திடமேயுள்ளது. பொறுப்பற்ற விதத்தில் தோட்ட முகாமைத்துவம் செயல்பட்டிருக்கின்றது.

வீரன் தனலட்சுமிக்குய ஊழியர் சேமலாப நிதியை தோட்ட காமைத்துவம் வழங்க வேண்டுமென்று, தோட்ட முகாமைத்துவத்தினைப் பணித்துள்ளது. தர்ம லிங்கம் தனலட்சுமிக்கு வழங்கப்பட்ட பணத்தை தோட்ட முகாமைத்துவம் மீளப் பெறும் நடவடிக்கைகளை எடுக்க பூரண உரிமையுண்டு என்றும் மனித உரிமை ஆணைக் குழு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மருதைவீரன் தனலட்சுமிக்கு சேர வேண்டிய ஊழியர் சேமலாப நிதியை, தோட்ட முகாமைத்துவத்திடமிருந்து பெற்றுக் கொடுக்கும் வகையில் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஈடுபட்டுள்ளது. தோட்ட முகாமைத்துவம் அப்பணத்தை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல