இந்த நோயின் காரணமாக ஆண்மைக்குறைபாடு வந்தவர்களுக்கு ஆரம்பத்தில் விரைப்புத்தன்மையின் தீவிரத்தன்மை குறையலாம். உறவு கொள்ளும் நேரமும் குறையலாம். சில பேருக்கு விரைவில் விந்து வெளியேறி விடலாம். இன்னும் சிலருக்கு விந்து முன்னோக்கி பீய்ச்சுவதற்குப் பதில் பின்னோக்கி உள்ளுக்குள்ளேயே சிறுநீர்ப்பையில் பீய்ச்சி விடலாம். சர்க்கரை நோய் தானியங்கி நரம்பு மண்டலத்தைத் தாக்குவதால் இந்த நோயாளிக்கு செக்ஸ் தூண்டுதல் என்பது முன்பை விட குறைவாக இருக்கும்.
சர்க்கரை நோயினால் ஏற்பட்ட ஆண்மைக்குறைவை நவீன சிகிச்சை மூலம் சரி செய்யலாம்!
சர்க்கரை நோய் உள்ள ஆண்களுக்கு பிரச்சினை ஏற்படுவது போலவே பெண்களுக்கும் உச்சக்கட்டம் அடைவதில் பிரச்சனை ஏற்படும். மேலும் பெண்ணுறுப்பில் சுரக்கும் லூப்பிரிகேஷன் திரவமானது போதுமான அளவில் சுரப்பதில்லை. இதனால் உடலுறவின் போது தீராத வலியும் உண்டாகிறது. பெண்ணுறுப்பில் போதுமான அளவு ரத்தம் பாய்ந்து உடலுறவின் போது ஏற்படும் மாற்றங்கள் ஏற்படுவதில்லை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் சர்க்கரை நோயின் காரணமாக செக்ஸ் மீது ஆர்வம் குறைகிறது. செக்சில் ஈடுபட்ட பிறகு மன நிறைவு ஏற்படுவதில்லை. உடலுறவின் போது உச்சக்கட்ட சிக்கல் போன்றவை உண்டாகின்றன.
இப்படிப்பட்டவர்களுக்கு உண்மையிலேயே ஆண்மைக்குறைவு உண்டாகவில்லை என்றாலும் அவர்களது மன அச்சத்தின் காரணமாக ஏற்பட்டு விடலாம். இந்த மன ரீதியான ஆண்மைக் குறைவு உண்டானவர்கள், உச்சக்கட்டம் அடைய முடியாதவர்கள் உடலுறவின் போது வலி ஏற்படுகிறவர்கள், உடலுறவில் ஆர்வம் குறைந்தவர்கள் இவர்கள் எல்லோரையுமே மிக மிக எளிதாக செக்ஸ் கவுன்சிலிங், செக்ஸ் தெரபி, ஹிப்னோதெரபி முறைகளில் முழுமையாகக் குணப்படுத்த முடிகிறது. தவிர சர்க்கரை நோயினால் ஆண்மைக்குறைவு உண்டானவர்களுக்கு நவீன கருவிகள் மூலம் சரி செய்யும் அளவு மருத்துவ வசதிகள் பெருகி விட்டன.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக