திங்கள், 15 பிப்ரவரி, 2010

பிறப்புறுப்பை சுத்தமாக வையுங்கள்

ஆணும், பெண்ணும் கலவி இன்பத்தை அனுபவிக்கவும், குழந்தை பெற்றுக்கொள்ளவும், அவர்களது பிறப்புறுப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்வது மிக அவசியம். அப்போது தான் அவர்களால், முழுமையான கலவி இன்பத்தை அனுபவிக்கவும், குழந்தை பெற்றுக்கொள்ளவும் முடியும்.

இதற்கான சில மருத்துவக் குறிப்புகளையும் காமசூத்திரத்தில் சொல்லி இருக்கிறார்கள். அவை...

வேப்பம்பட்டையைப் போட்டுக் காய்ச்சிய நீரினால், பெண்ணின் குறியை தினமும் கழுவி வந்தால், அதில் உள்ள நோய்க்கிருமிகள் அழிவதோடு, துர்நாற்றமும் நீங்கும்.

தவிர, குழந்தை பெற்ற பெண்ணுக்கு, கடுக்காய், திராட்சைக்கொடித் துண்டு இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து அரைத்து, பிறப்புறுப்பில் புகை போட்டால், துர்நாற்றம் அனைத்தும் நீங்குமாம்.

அதே போல, குழந்தை பெற்ற சில தாய்மார்களுக்கு, தாய்ப்பால் சுரப்பது அளவில் மிகக்குறைந்திருக்கும். அப்படிப்பட்ட பெண்களுக்கான வழிமுறைகளும் காமசூத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன.

அவை...

தாமரை மலரை, கறந்த பாலுடன் சேர்த்து தினமும் குடித்து வரும் பெண்ணுக்கு தாய்ப்பால் அதிக அளவில் சுரக்குமாம். தவிர, தாமரை மொட்டு, தாமரைத் தண்டு போன்றவற்றை தொடர்ந்து 7 தினங்களுக்குச் சாப்பிட்டு வந்தாலும் முலைகளில் பால் சுரப்பது அதிகரிக்கும் என்ற குறிப்பும் காமசூத்திரத்தில் காணப்படுகிறது.

குழந்தை பெற்ற பெண்ணின் குறி, அளவில் பெரிதாக விரிந்து விடும். பெரிய குழந்தை வயிற்றுக்குள்ளிருந்து, பிறப்புறுப்பு வழியாக வெளியேறுவது தான் இதற்குக் காரணம். இதனால், கணவன், மனைவி உடலுறவு கொள்ளும் போது திருப்தியாக இருக்காது. இதைச் சரி செய்யவும் ஒரு குறிப்பு கூறப்பட்டுள்ளது.

அது என்ன...?

ஜாதிவேரை அரைத்து நீருடன் சேர்த்து குடித்து வர வேண்டும். இப்படிச் செய்வதால் வயிறு சின்னதாகும். மஞ்சள், நெய், ஊசிரிக்காய் இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர, குழந்தை பெற்ற பெண்ணின் பெண்குறி முன்பு போலவே,. சிறியதாகும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல