இங்கு கூறப்படுபவை காதலன்-காதலி, கணவன்-மனைவி இருவருக்கும் பொருந்தும்.
உத்திபாக சும்பன் (காம இச்சையைத் தூண்டும் முத்தம்)
கலிதக சும்பன் (கவனத்தைத் திருப்பும் முத்தம்)
பிரீதிபோதகா சும்பன் (ஆசையை உணர்த்தும் முத்தம்)
சாயா சும்பன் (நிழலை முத்தமிடுதல்)
சங்கிரந்த் சும்பன் (மாற்றப்பட்ட முத்தம்)
உத்திபாக சும்பன் (காம இச்சையைத் தூண்டும் முத்தம்)
காதலன் அயர்ந்து படுத்துத் தூங்கிக் கொண்டிருக்க, காதலி மோகம் பொங்க ஏக்கப் பெருமூச்செறிந்து அவனது முகத்தையே நெடு நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு கடைசியில் அவனது கன்னத்தில் மெல்ல முத்தமிட்டு அவனது காம இச்சையைத் தூண்டுவது இந்த முறையாகும்.
கலிதக சும்பன் (கவனத்தைத் திருப்பும் முத்தம்)
காதலன் காதலியைப் பார்க்காமல் வேறு ஏதவாது வேலைகளில் ஈடுபட்டிருக்க, காதலி அவனது கவனத்தைத் தன் பக்கம் திருப்பும் விதத்தில் அவனுக்கு முத்தம் அளிப்பது இந்த வகை.
பிரீதிபோதகா சும்பன் (ஆசையை உணர்த்தும் முத்தம்)
காதலி தூங்கிக் கொண்டிருக்கிறாள். பணி முடித்து வெகு நேரம் சென்று வீடு திரும்பிய காதலன், தனது ஆசையை அவளுக்கு உணர்த்தும் விதத்தில் அவளது கன்னத்தில் மெதுவாக முத்தம் பதிப்பது இந்த வகை.
சாயா சும்பன் (நிழலை முத்தமிடுதல்)
காதலன் தன் காதலை வெளிப்படுத்த, முகக் கண்ணாடி அல்லது நீர் நிலையில் தெரியும் காதலின் முகத்தில் முத்தமிடுவது இந்த வகை
சங்கிரந்த் சும்பன் (மாற்றப்பட்ட முத்தம்)
காதலி, தனது காதலனிடம் காதலை வெளிப்படுத்த அருகில் இருக்கும் குழந்தை, ஓவியம், அல்லது சிலைகளுக்கு முத்தமிடுவது இந்த வகை.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக