தேவையான பொருட்கள்
•கேரட் - கால் கிலோ,
•பால் - அரை லிட்டர்,
•சர்க்கரை - 300 கிராம்,
•ஏலக்காய் - 4,
•முந்திரி - 10,
•பாதாம் - 5.
செய்முறை
•கேரட்டை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.
•சிறிது தண்ணீர் சேர்த்து கேரட்டை வேக வைக்கவும்.
•வெந்ததும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.
•பாதாம், முந்திரியை நைசாக அரைத்து வைக்கவும்.
•பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவும்.
•சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.
•சர்க்கரை கரைந்து, பால் கொதிக்கும் போது அரைத்த கேரட், பாதாம், முந்திரி சேர்த்து கலக்கவும்.
•ஏலக்காயை தூளாக்கி சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.
•பாதாம் கீரை போலவே சுவையான கேரட் கீர் ரெடி.
திங்கள், 15 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக