•ரவை - கால் கிலோ
•வெங்காயம் - 150 கிராம்
•தக்காளி - 100 கிராம்
•பச்சை மிளகாய் - 2
•மல்லி,புதினா,கருவேப்பிலை - சிறிது
•எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
•நெய் - 1 டீஸ்பூன்
•இஞ்சி பூண்டு பேஸ்ட் -1- 2 டீஸ்பூன்
•கரம் மசாலா - அரை டீஸ்பூன்
•சில்லி பவுடர் -1 டீஸ்பூன்
•உப்பு - தேவைக்கு
செய்முறை
•முதலில் ரவையை மணம் வருமாறு வறுத்து எடுக்கவும்.
•வெங்காயம்,தக்காள்,மல்லி,புதினா,மிளகாய் கட் செய்து கொள்ளவும்.
•அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் வதக்கி,இஞ்சி பூண்டு,கரமசாலா சேர்த்து வதக்கி,வெங்காயம்,தக்காளி,உப்பு,மிளகாய்,மல்லி,புதினா,கருவேப்பிலை சேர்த்து வதக்கி சில்லி பவுடர் சேர்த்து பிரட்டி சிறிது நேரம் கழித்து ரவைக்கு ஒன்றுக்கு 2 -3 அளவு தண்ணீர் வைத்து லேசாக கொதி வந்ததும் வறுத்த ரவை சேர்த்து கிளரி பதம் வந்தவுடன் நெய் சேர்த்து பிரட்டி இறக்கவும்.
•சுவையான காராபாத் ரெடி.இதனை புதினா சட்னியுடன் பரிமாறலாம்.காரம் பிரியப்படாதவர்கள் சில்லி பவுடரை அரைஸ்பூனாக குறைத்து கொள்ளலாம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக