திங்கள், 15 பிப்ரவரி, 2010

பாலுறவு முறைகளும் சிகிச்சை முறைகளும்

திருமணத்தின் ஓர் அங்கமாக இருப்பது பாலுறவு. இது தம்பதியர் ஒரு வருக்கு ஒருவர் இன்பத்தைப் பரிமாறிக் கொள்வதற்காக மட்டுமின்றி, எதிர்கால சந்ததியை உருவாக்குவதற்கும் ஓர் கருவியாகச் செயல்படுகிறது.

இந்த பாலுறவை இருவருமே திருப்தியாக தரவேண்டும், பெறவேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்குள் சிக்கல்கள் தோன்றிவிடும்.

இதற்கு இருவருக்குமே உடல் நலமும், மன நலமும் சரியாக இருக்க வேண்டும். இந்த இரண்டிலும் குறைபாடு இருந்தால் குடும்பத்தில் பிணக்குகள் தோன்றும். என்னென்ன பிரச்சினைகள் என தெரிந்துகொள்ளுங்கள்.

ஆணுக்குத் தோன்றும் பாலுறவுக் குறைபாடுகள்

ஆணுக்குத் தோன்றும் பாலுறவுக் குறைபாடுகளில் முக்கியமானது விந்து முந்துதல், ஆண்மைக்குறைவு, நரம்புத் தளர்ச்சி, நோய், மந்த நிலை அல்லது முரட்டுத்தனம், தூண்டல் முறைகளை அறியாதது ஆகியவற்றைக் கூறலாம்.
பெரும்பாலான போலி மருத்துவர்கள் ஆண்களின் இந்தக் குறைபாட்டை விளம்பரமாக்கி நிறைய காசு சம்பாதித்துக் கொள்கிறார்கள்.

விந்து முந்துதல் ஏற்படுவதற்குக் காரணம் ஆண்களின் மனநிலையில் ஏற்படும் மிகையான தூண்டல்கள். இயல் பாகவே ஆண் தான் அடையும் பாலுறவைவிட அதைப் பற்றி மிகையாக நினைப்பதுதான் அதிகம். இவ்வாறே தனது மனைவியைவிட நடிகையை அல்லது பிற பெண்களை நினைத்துக் கொண்டு தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது விரைவாக விந்து வெளியேறி விடுகிறது. இவ்வாறு ஒவ்வொரு முறையும் விந்து முந்துதல் ஏற்பட்டால் பெண்ணுக்கு பாலுறவின் மீதே வெறுப்பு ஏற்பட ஆரம்பித்துவிடும். இதனால் பலர் தனக்கு ஆண்மையில்லையோ என நினைத்துக் கொண்டு பல மருத்துவர்களை நாடி ஓடுகிறார்கள்.

இது தீர்க்கப்படக்கூடிய பிரச்சினை. ஆண் மேற்புறமாகவும், பெண் கீழ்ப்புற மாகவும் இருந்து தாம்பத்ய உறவு கொண்டால் விந்து முந்துதல் அதிகமாக இருக்கும். இந்த நிலையை மாற்றி ஆண்-கீழ், பெண்-மேல் நிலையில் பாலுறவு கொண்டால் பிரச்சினையை தீர்க்கலாம். தவிர தாம்பத்திய உறவின் போது படபடப்பு, அச்சம், வேறு விதமான உணர்வுகளைக் காட்டுவது, செயலைவிட மனதை அதிகம் தூண்டுவது ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் இந்தப் பிரச்சினையை தீர்க்கலாம்.

ஆண்மையின்மை

ஆண் உறுப்பு விரைப்படையாத நிலைக்குத் தள்ளப்படுவதை ஆண்மை யின்மை என்கிறார்கள். ஆண் களைப்பாகவோ, நோயாகவோ அல்லது மனம் சார்ந்த பாதிப்புகள், நரம்பு மண்டலக் கோளாறுகள், சில மருந்து மாத்திரைகள், புதிய சூழல்கள் போன்றவற்றால் விரைப்iபுத் தன்மையை இழந்துவிடும் போது இந்த நிலை உண்டாகிறது.

விந்து முந்துதலும், எழுச்சியற்ற நிலையும் பலருக்கு முதலிரவு நேரத்தில் உண்டாகிவிடுவதால், தனக்கு ஆண்மை போய்விட்டதோ என ஆணும், இவ னுக்கு ஆண்மையே இல்லை போலும் என பெண்ணும் நினைத்துக் கொண்டு பிரச்சினையை வளர்த்துக் கொள்வார்கள்.

முதலிரவு நேரத்தில், அல்லது தற்காலிகமாக இத்தகையப் பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பு. இதை பயிற்சிகள் மூலமும், தம்பதியர் மனம் விட்டுப் பேசுவதன் மூலமும் தவிர்த்துக் கொள்ளலாம்.

இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
நரம்புத் தளர்ச்சி பெரும்பாலும் நரம்பு மண்டல பாதிப்பு, மருந்து மாத்திரைகளின் பக்க விளைவுகள், பழக்க வழக்கங்கள், கடுமையான உழைப்பு போன்றவற்றால் ஏற்படுகிறது. இதனால் விரைப்பு இல்லாமை, போதுமான தாம்பத்ய உறவு கொள்ள இயலாமை போன்றவை ஏற்படும். இந்தப் பிரச்சினையை மருத்துவரின் ஆலோசனைப்படி தீர்த்துக் கொள்ளலாம்..

நோய்

ஆண் அடிக்கடி நோய் வாய்ப்படும் போதும், இதய நோய்கள், சிறுநீரக நோய்கள் போன்ற உள்ளுறுப்பு சார்ந்த நோய்களால் பாதிக்கப்படும்போதும், உளவியல் காரணங்கள் அழுத்தும் போதும் இயல்பாக செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படும்.

மந்த நிலை அல்லது முரட்டுத் தனம்

தாம்பத்திய உறவில் ஈடு படும்போது மந்த நிலையும் இல்லாமல் முரட்டுத் தனமாக வும் செயல்படாமல் கவனமாக இருக்க வேண்டும். இரண்டுமே பெண்ணின் பாலின்பத்திற்கு உடல் மற்றும் உள்ள அளவில் இடையூறாக இருக்கும்.

தூண்டல் முறை அறியாதது

ஆணுக்கு பாலுறவு பற்றி நினைத்தாலே உறுப்பு எழுச்சியடையும். ஆனால் பெண்ணுக்கு தொடுதல், தழுவுதல், பேசுதல் போன்றவற்றின் மூலமே எழுச்சி யடையும். அதன் பிறகு பாலுறவு கொண்டால் பெண் திருப்தியடைவாள். இல்லாவிட்டால் விரக்தி நிலையை அடைந்து பாலுறவை வெறுக்க ஆரம்பிப்பாள்.

ஆண் பாலுறவுக்குப் பின்னால் திருப்தியடைகிறான், பெண் பாலுறவுக்கு முன்னால் திருப்தியாக இருக்கிறாள் என இதைப் பற்றி ஒரு பழமொழி உண்டு.

அதனால்தான் பாலுறவுக்கு முன்பு நீண்ட நேரம் முன்விளையாட்டு எனப் படும் தூண்டல் முறைகளில் ஈடுபட வேண்டும் என கணவர்களை மருத்து வர்கள் வற்புறுத்துகிறார்கள். இப்போது உள்ள வாழ்க்கைச் சூழல், இட நெருக்கம் போன்றவற்றால் தூண்டல் முறை அவ்வளவு சாத்தியமாக இருப்பதில்லை என்றாலும், கூடுமானவரை இவற்றில் ஈடுபடுவது நல்லது..

பெண்ணுக்குத் தோன்றும் குறைபாடுகள்

தாழ்வு மனப்பான்மை, இயற்கையாக அமைந்த உடலமைப்பு, உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பு, பயம் போன்ற உணர்வுகள், இனி குழந்தை பிறக்காது என்ற விரக்தி, மிகுந்த களைப்பு, அதிக அலைச்சல், வயோதிகமாகிவிட்டது என்ற நினைப்பு போன்றவை பெண்ணுக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி கிளர்ச்சியின்மை ஏற்படுத்துகிறது.

உடல் சார்ந்த பிரச்சினைகள்

மாதவிலக்கு காலங்களில் பெண்கள் ஒதுங்கியிருப்பது நல்லது. இக்காலத்தில் உறவு கொண்டால் கருப்பை உள்வரிச் சவ்வு அழற்சி உண்டாகும். இந்தக் காலத்தில் பாலுறவு கொள்வது அசுத்தம் என நினைப்பதால் பெண்கள் திருப்தியாக பாலுறவில் ஈடுபட இயலுவதில்லை.

நோய்கள்

பெண்கள் எப்போதுமே கவர்ச்சியாக இருக்க விரும்புபவர்கள். தனது கவர்ச்சியால் ஆடவனை கவிழ்த்துவிட வேண்டும் என நினைப்பவர்கள்.

சில பெண்கள் தங்களுக்கு கவர்ச்சியான உடலோ, எடுப்பான மார்பகங் களோ இல்லையே என தாழ்வு மனப்பாண்மையோடு இருப்பார்கள். இதனால் தாம்பத்ய உறவில் ஈடுபட முடியாது.

பிறவியிலேயே புணர்புழை போதுமான அளவு விரிந்திராத நிலை, கெட்டி யான கன்னித்திரை போன்றவை இருந்தாலும் தாம்பத்திய உறவில் ஈடுபட சிரமமாக இருக்கும். இதை அறியாத கணவன் அவள் மீது கோபித்துக்கொண்டு பிரச்சினைக்கு வித்திடுவான்.

சில பெண்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும்போதும், நோயின் போதும் தாம்பத்திய உறவை தவிர்க்க விரும்புவார்கள்.

கட்டை போல கிடக்கிறாள், எப்போதும் நோய் நோய் என நோயாளியாக இருக்கிறாள் என்ற வெறுப்பு போன்றவை மனைவி மீது கணவனுக்கு எரிச்சல் வந்துவிடுகிறது. அதுவே பிரச்சினையாக வும் முடிகிறது.

இதைத் தவிர, மலட்டுத் தன்மை, கருவுறுப்புகள் வளராமையால் குழந்தை பேறின்மை போன்றவையும் பிரச்சினைகளுக்குக் காரணமாகின்றன.

தீர்வு

தம்பதியருக்குள் இத்தகைய பிரச் சினைகள் இருப்பதை ஒருவருக்கு ஒருவர் தெரிந்துகொள்ள நேரிடும் போது தான் அதற்கு என்ன தீர்வு என்பதை தெரிந்துகொள்ளவும், பிரச்சினையை போக்கிக் கொள்ளவும் முடியும்.
ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுதல் மூலம் மனம் சார்ந்த பிரச்சினை கள் அனைத்தும் தீர்வதால் பாலுறவு பிரச்சினையில்லாமல் நகரும்.

தற்போது உடல் ரீதியான குறைகளை போக்குவதற்காக பல்வேறு அதிநவீன சிகிச்சைமுறைகள்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல