திங்கள், 15 பிப்ரவரி, 2010

கூச்ச உணர்வு தான் கலவி இன்பத்தின் எதிரி

கூச்சம் என்பது ஆண், பெண் எல்லோர்க்கும் பொதுவான ஒன்று தான். இதில் வயது வித்தியாசமும் கிடையாது. இது உளவியல் அறிஞர்கள் சொல்லும் உண்மையாகும்.

எனவே கணவனோ, மனைவியோ கூச்சமின்றிப் பேசினால் தான் ஒருவருக்கு ஒருவர் தங்கள் மனதில் உள்ள அந்தரங்க ஆசைகளைப் பரிமாறி செக்சில் முழு இன்பத்தையும் அனுபவிக்க முடியும். எங்களிடம் வரும் சிலர் 50 வயதைக் கடந்த பின்னரும் கூட இன்னும் செக்ஸ் பற்றிய சில உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது வேதனையான விஷயம்.

அதற்கு முக்கியக் காரணம் அவர்கள் மனதில் இருக்கும் கூச்சம். தனது ஆசைகளைச் சொன்னால் கணவர் நம்மைக் காமவெறி பிடித்தவள் என்று பெண்கள் நினைத்துக் கொள்வதும் அதே போல ஆண்கள் நினைத்துக் கொள்வதும் தான்.

இது குறித்து மருத்துவரிடம் கேட்கலாமா? அல்லது மற்ற தெரிந்த நண்பர்களிடம் அல்லது தோழியரிடம் கேட்கலாமா? கேட்டால் தப்பாக நினைத்துக் கொள்வார்களா? என்கின்ற எண்ணம் தான் அதற்குக் காரணம்.

சரி. இவர்கள் மற்றவரிடம் தான் கேட்க வேண்டாம். செக்ஸ் மருத்துவ நிபுணர்களிடமாவது கேட்டு தங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டாமா? இன்னும் ஒரு சிலருக்கு செக்சில் அல்லது ஒரு செயலில் மிகுந்த ஈடுபாடு இருக்கும்.

ஆனால் இதை எப்படி நமது துணையிடம் கேட்பது என்ற தயக்கம் இருக்கும். நடுத்தர வயதைத் தாண்டிய பலரிடம் செக்சில் ஆர்வம் குறைந்து வருவதாக எங்களிடம் ஆலோசனை பெற வருபவர்களின் பேச்சிலிருந்து தெரிந்து கொண்டோம்.

தங்களுக்கு வயதுக்கு வந்த பிள்ளைகள் இருக்கின்றனர் என்ற எண்ணத்தில் பலர் செக்சைத் தவிர்த்து விடுகிறார்கள். இன்னும் சிலர் முற்றிலுமாக செக்சிலிருந்து விலகிப்போய் விடுகின்றனர்;.

அன்றாட வாழ்க்கையில் சந்தோஷத்துடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்க, வாழ்க்கை அர்த்தம் பொதிந்த விஷயம் என்பதற்கு செக்ஸ் துணை புரியும் என்பதை பலர் உணராததால் இவ்வாறு உள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல