முட்டை - 3
பால் - கால் கப்
கடலை மாவு - 1
தேக்கரண்டி
மைதா - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
கேரட், குடை மிளகாய், தக்காளி - தலா 1
பச்சை மிளகாய் - 2
உப்பு, மிளகு தூள் - சிறிது
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை
முட்டைகளை உடைத்து கிண்ணற்றில் ஊற்றி நுரை பொங்க அடிக்கவும்.
அதில் பால், கடலை மாவு, உப்பு, மிளகு தூள் சேர்த்து
கலக்கிக் கொள்ளவும்.
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், காய்கறிகள், தக்காளி ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
தோசைக் கல்லை சூடாக்கி
அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் ஒரு ஆம்லேட்டுக்குத் தேவையான முட்டைக் கலவையை ஊற்றவும்.
ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு சிறிது எண்ணெய் விட்டு சிறிது நேரத்தில் எடுத்து விடவும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக