திங்கள், 15 பிப்ரவரி, 2010

ஆண்குறி சிறியதாகவோ, பருமன் குறைந்து இருந்தாலோ மனைவியை திருப்திபடுத்த இயலாதா?

இந்த எண்ணம் அநேக ஆண்களுக்கு ஏற்படுகிறது. சாதாரணமாக மனித உருவங்களில் வேற்றுமைகள் இருப்பதைப்போலவே ஆண்குறியின் பருமனிலும் மனிதருக்கு மனிதர் வேற்றுமை இருக்கவே செய்கிறது.

சாதாரணமாக உணர்ச்சி வசப்பட்டு ஆண்குறி விரைத்து எழும் போது ஒருவருடைய ஆண் குறியிலிருந்து இன்னொருவருடையது அதிக வித்தியாசப்படுவதில்லை. ஆண்குறி விரைத்து எழாவிட்டால் அதை யோனித் துவாரத்திற்குள் நுழைக்க இயலாது. இதற்காகத்தான் விரைத்தெழும் ஆற்றலை இயற்கை ஆண்குறிக்குக் கொடுத்துள்ளது.

விரைத்து எழும்போது எல்லா ஆண்குறிகளுமே யோனித் துவாரத் திற்குள் நுழையும் நீளத்தைப் பெற்று விடுகின்றன என்பது தான் உண்மை. ஆகவே சாதாரண நிலையில் ஆண் குறியின் நீளமோ பருமனோ குறைவாக இருப்பது பெண்ணை திருப்திபடுத்துவதற்கு ஒருபோதும் துணையாக இருக்காது.

தன்னுடைய ஆண் குறி சிறியதாக இருப்பதால் போகத்தின் போது மனைவியை திருப்திபடுத்த முடியாதே என்கிற எண்ணமே ஒரு தாழ்வு மனப்பான்மையைத் தோற்றுவித்து விடும். அதன் விளைவாக உறவு கொள்ள முயற்சிக்கும் போது அது விரைத்தெழ முடியாமலும் போய்விடக்கூடும். இது ஆண் குறியின் குறையல்ல, அதற்கு சொந்தக்காரருடைய மனதின் குறை.

நீளம் முக்கியமல்ல, அதை நீங்கள் எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பது தான் முக்கியம். அனுபவத்தில் உங்கள் மனைவிக்கு என்ன தேவை, எது பிடிக்கும் என்பதையெல்லாம் நீங்களே அறிந்து செயல் படத் தொடங்கிவிடுங்கள்.

செக்ஸ் என்பது ஆண்குறியிலோ, நீளத்திலோ அல்ல.. உங்களுடைய மனதில்தான் இருக்கிறது. மனம் உற்சாகமாக இருந்தால் மற்றவை தானாகவே நடக்கும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல