திங்கள், 15 பிப்ரவரி, 2010

தேங்காய் அப்பம்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 500 கிராம்
தேங்காய் - 1
சீனி - 250 கிராம்
ஈஸ்ட் - ஒரு சிட்டிகை

செய்முறை:

பச்சரிசியைக் கழுவி, பிறகு நன்கு ஈரம் போக உலர வைத்து, மாவாக இடித்து பிறகு சலிக்க வேண்டும். தேங்காயைத் துருவ வேண்டும். தேங்காய்த் துருவல், சீனி, மாவு அனைத்தையும் சேர்த்து முதல் நாள் இரவு இட்லி மாவு போல கரைத்து வைக்க வேண்டும். சிறிது நீரில் ஈஸ்டைக் கரைத்து மாவுடன் சேர்த்து நன்கு கலந்து வைக்க வேண்டும்.

மறுநாள் காலை வட்ட வடிவமான தட்டுகளில் மாவை அரை இஞ்ச் அளவுக்கு ஊற்றி இட்லிப் பாத்திரத்தில் வைத்து ஆவியில் 10 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும். வெந்த பின்பு அது அளவில் பெரியதாகிவிடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல