•சிக்கன் - 1 கிலோ
•இஞ்சி பூண்டு விழுது - 50 கிராம்
•தயிர் - 200 மில்லி
•சில்லி பவுடர் - 2 டீஸ்பூன்
•எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
•முட்டை - 1
•ராக் சால்ட் - அரைஸ்பூன்
•கசூரி மேத்தி பவுடர் - 1 -2 டேபிள்ஸ்பூன்
•கரம் மசாலா பவுடர் (ஏலம்,பட்டை,கிராம்பு)-அரைஸ்பூன்
•ரெட் கலர் பவுடர் - 2 பின்ச்
•எலுமிச்சை - பாதி (பெரிய பழம்)
•உப்பு - தேவைக்கு
செய்முறை
•சிக்கனை சுத்தம் செய்து விருப்பம் போல் துண்டு போட்டு தண்ணீர் விட்டு நன்கு கழுவி வடிகட்டிக்கொள்ளவும்.
•நன்றாக தண்ணீர் வடிந்தபின்பு மேற்குறிப்பிட்ட தேவையான பொருட்கள்
•அனைத்தும் சேர்த்து கலந்து குறைந்தது 3 மணி நேரமாவது ஊறவைக்க வேண்டும்.முதல் நாள் கூட தயார் செய்து வைத்துகொள்ளலாம்.
•பின்பு ஊறிய சிக்கனை தந்தூரி அடுப்பிலோ அல்லது கிரில் செய்தோ அல்லது பொரித்தும் சாப்பிடலாம்.
•எப்படி சாப்பிட்டாலும் தந்தூரி டேஸ்ட் இருக்கும்.இதில் ராக் சால்ட் சேர்ப்பது மிகவும் முக்கியம்.ராக் சால்ட் துண்டாக இருந்தால் பொடித்துக்கொள்ளவும்.
•ஆனியன் கேரட்,வெள்ளரி,கோஸ்,கட்செய்து எலுமிச்சை பிழிந்து சாலட் தயார் செய்து அத்துடன் பரிமாறலாம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக