புதன், 24 நவம்பர், 2010

போலி விசா மூலம் இரு பிள்ளைகளை பிரான்சுக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த பெண்ணுக்கு 10 வருடம் ஒத்திவைக்கப்பட்ட இரண்டாண்டு கடூழியச் சிறைத் தண்டனை!

பிரான்ஸூக்கு சென்ற பின்னர், 30 லட்சம் ரூபாவை பெற்றுக்கொள்ளும் நோக்கில், வேறு பெற்றோரின் இரண்டு பிள்ளைகளை தனது பிள்ளைகள் எனக் கூறி, போலி வீசா மூலம் பிரான்சுக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த குற்றத்தை ஏற்றுக்கொண்ட பெண்ணொருவருக்கு நீர்கொழும்பு பிரதான நீதவான் ஜயகி டி அல்விஸ் 10 வருடம் ஒத்திவைக்கப்பட்ட இரண்டாண்டு கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்மாளித்துள்ளார். அத்துடன் 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த கமலாவதி செல்வம் என்ற பெண்ணே, குடிவரவு குடியகல்வுச் சட்டத்தை மீறிய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.இவர் 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி வேறு பெற்றோரின் இரண்டு பிள்ளைகளை தனது பிள்ளைகள் எனக் கூறி, பிரான்சுக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த போது, கட்டுநாயக்க விமான நிலையத்தின் குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். 30 லட்சம் ரூபாவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அவர் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல