புதன், 24 நவம்பர், 2010

சமாதானத்துக்கு பின்னான யுத்தத்துக்கு தமிழீழ விடுதலைப்புலிகளே பொறுப்பு! - வைத்தியர் சிவபாலன் சாட்சியம்

2002ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் சமாதானம் ஏற்படுவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்ட தன் பின்னர் ஏற்பட்ட யுத்தத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் விடுதலைப் புலிகளே பொறுப்பு என தமிழ் மக்கள் நம்புவதாக இறுதிக் கட்ட யுத்தத்தின்போது முள்ளிவாய்க் கால் வைத்தியசாலையில் கடமை யாற்றிய வைத்தியர் எஸ்.சிவபாலன் தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை மாலை கொழும்பு லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் இடம்பெற்ற கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லி ணக்க ஆணைக்குழு முன்னிலை யில் சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து சாட்சியம ளித்த வைத்தியர் எஸ்.சிவபாலன் கூறியதாவது,

இந்த யுத்தம் காரணமாக பல்லா யிரக்கணக்கான உயிர் மற்றும் உட மைகள் அழிந்துள்ளன. அது மாத்திரமில்லாமல் வன்னிப்பகுதி முழுமையாக அழிவடைந்துள்ளது. இவ்வளவு பாரிய அழிவுகளை ஏற்படுத்திய இந்த யுத்தத்தின் மூலம் எமது சமூகத்திற்கு எதுவும் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் மக்கள் உள்ளார்கள்.

தனிநாடு கோரிக்கையை முதலில் ஏற்படுத்தியது தமிழ்க் கட்சிகளே. அதனையடுத்து சிறு ஆயுதக்குழுவாக உருவாகிய விடுதலைப்புலிகள் இயக்கம் பின்னர் பாரிய இயக்கமாக மாறியது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு இந்தியாவிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டது.இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஆயதங்களைக் களைந்து விட்டு மக்களுடன் மக்களாக இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள முற்பட்டார்கள் என்றார்.

இந் நிலையில் கற்றுக்கொண்ட பாடங் கள் மற்றும் சமூக நல்லிணக்க ஆணைக் குழுவின் உறுப்பினர்களால் வைத்தியர் எஸ்.சிவபாலனிடம் சில கேள்விகள் கேட்கப் பட்டன. அதன் விபரம் வருமாறு,

ஆணைக்குழு : விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து இராணுவக்கட்டுப்பாடு பகுதிக்குச் சென்ற பொதுமக்களை விடுதலைப் புலிகள் சுட்டார்கள் என்பது உண்மையா?

சிவபாலன் : இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கடல் நீரேரி ஊடாக மக்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதிக்கு நடு இரவில் சென்றனர். இரு பகுதிக்குமிடையிலான தூரம் 200 தொடக்கம் 300 மீற்றர் ஆகும். இதன் ஆழம் கழுத்துப் பகுதி வரை இருந்தது. புலிகளின் பகுதியில் நடப்பது இராணுவத்தினருக்கு அறிய முடியாது. நடுநிசியில் மக்கள் சென்றபோது புலிகள் வானை நோக்கி சுட்டார்கள். அதனையடுத்து இராணுவத்தினரும் வானை நோக்கி சுட்டனர். இதனால் மக்கள் அச்சமடைந்து திரும்பி வந்தார்கள் சில சமயம் இராணுவக் கட்டுப் பாட்டுக்கு சென்ற மக்களை விடுதலைப் புலிகள் சுட்டுள்ளனர்.

ஆணைக்குழு : விடுதலைப் புலிகள் வைத் தியசாலைக்கு அருகிலா இருந்தார்கள்? சிவபாலன் : வைத்தியசாலையிலிருந்து 200 தொடக்கம் 300 மீற்றர் தூரத்திலிருந் தார்கள்.

ஆணைக்குழு : முள்ளிவாய்க் கால் வைத் தியசாலையில் விடுதலைப் புலி உறுப்பினர் களுக்கும் சிகிச்சை அளித்தீர்களா?

சிவபாலன் : விடுதலைப்புலி உறுப்பினர் களுக்கு 2009ஆம் ஆண்டு ஜனவரிக்குப் பின்னர் சிகிச்சையளித்தோம். அப்போது நாங் கள் வைத்தியர் நோயாளி என்ற உறவிலேயே செயற்பட்டோம்.

ஆணைக்குழு : விடுதலைப் புலிகளின் வைத்தியசாலைக் கட்டமைப்பு எவ்வாறு இருந்தது?

சிவபாலன் : சிறந்த முறையில் இயங் கியது. அவர்களின் வைத் தியசாலை தனியார் வைத்தியசாலை போன்றே இயங்கியது. 2002ஆம் ஆண்டு ஏற்பட்ட சமாதானத்தின் போது அவர்கள் தேவையான மருந்துகளை சேகரித்து வைத்திருந்தனர். அத்துடன் தேவையேற்படும் மருந்து களை கொழும்பிலிருந்து கொள்வனவு செய்தார்கள்.

ஆணைக்குழு : விடுதலைப் புலிகளின் வைத்தியசாலைகளில் நீங்கள் கடமையாற்றி யுள்ளீர்களா?

சிவபாலன் : விடுதலைப் புலிகளின் வைத்தியசாலைகளில் கடைமையாற்றியுள் ளேன். எனது சேவைக்கு அவர்கள் பணம் வழங்கினார்கள்.

ஆணைக்குழு : விடுதலைப்புலிகளின் வைத்தியசாலையில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதா?

சிவபாலன் : பொதுமக்கள் பணம் வழங்கியே சிகிச்சை பெற்றார்கள்.

ஆணைக்குழு : விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வைத்தியசாலை இயங்கு வதற்கு உதவியது யார்?

சிவபாலன் : வைத்தியசாலைக்கு தேவை யான பணத்தையும் அரசாங்கமே வழங்கி யது.

ஆணைக்குழு : விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வைத்திய சாலையில் எவ்வளவுகாலம் கடமையாற்றினீர்கள்?

சிவபாலன் : 1996ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டுவரை முள்ளிவாய்க்கால் வைத்தியாலையிலிருந்து கடமையாற்றியுள்ளேன். இக் காலப்பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 20ஆயிரம் மக்களுக்கு சிகிச்சையளித்துள்ளேன்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல