தாண்ட் பல நூல்களை மொழிபெயர்த்தார். 1948 இல் இவர் அரச சேவையில் அமர்ந்தார். 1951 முதல் 1957 வரை பர்மிய பிரதமர் ஊ நூவுக்கு செயலாளரானார். பல அனைத்துலக மாநாடுகளில் பங்கு பற்றினார். 1955 இல் இந்தோனீசியாவில் முதலாவது ஆசிய ஆபிரிக்க உச்சி மாநாட்டின் செயலாளராக இருந்தார். இம்மாநாடு அணி சேரா நாடுகள் அமைப்பை உருவாக்கியது.
1957 முதல் 1961 வரை ஐநாவின் பர்மாவுக்கான நிரந்தர அங்கத்துவராக இருந்தார். அல்ஜீரியாவின் விடுதலைக்காகக் கடுமையாக உழைத்தார். நவம்பர் 3, 1961 இல் தாண்ட் ஐநாவின் பதில் செயலாளர் நாயகம் ஆனார். நவம்பர் 30, 1962 இலிருந்து செயலாளர் நாயகமாக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
கியூபாவின் ஏவுகணை விவகாரம், கொங்கோ உள்நாட்டுப் போர் ஆகியவற்றின் முடிவுக்குக் கொண்டுவந்ததில் இவரது பங்கு முக்கியமானது. இவர் டிசம்பர் 31, 1971 இல் சேவையில் இருந்து இளைப்பாறினார். ஊ தாண்ட் நவம்பர் 25, 1974 இல் புற்றுநோய் காரணமாக நியூயோர்க்கில் காலமானார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக