புதன், 24 நவம்பர், 2010

பாகிஸ்தானில் மரணதண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் விடுவிக்கப்பட்டார்

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் நங்கானா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆசியா பீபீ.விவசாய கூலியான இவர் இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து தவறான வார்த்தைகளை கூறியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதற்காக மதத்துவேஷ தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்தது.

இந்த தண்டனையை எதிர்த்து அவர் கவர்னரிடம் கருணை மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில் மதத்தையோ, இறைத்தூதரையோ பற்றி எதுவும் நான் கூறவில்லை என்று கூறி இருந்தார்.

இந்த மனுவை ஏற்று பாகிஸ்தான் அதிகாரிகள் அவரை விடுதலை செய்தனர். ஆனால் அவர் பாதுகாப்பு காரணங்களுக்காக வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையில் அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளித்தாரா என்பது குறித்து எதையும் உறுதிப்படுத்த முடியாது என்று ஜனாதிபதி மாளிகை அதிகாரி தெரிவித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல