புதன், 24 நவம்பர், 2010

கம்போடியாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 345 பேர் பலி!. (படங்கள் இணைப்பு)

கம்போடியாவில் வருடாந்திர திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தபட்சம் 345 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கம்போடியாவின் முக்கிய திருவிழாவான வருடாந்திர திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மழை காலத்தையொட்டி நடைபெறும் இத்திருவிழாவுக்கு தண்ணீர் திருவிழா என பெயர் சூட்டி கம்போடியா மக்கள் கொண்டாடுவது வழக்கம். கம்போடியா தலைநகர் போனேபென் நகரில் தண்ணீர் திருவிழாவை கொண்டாட டோன்லிசாப் நதிக்கரையில் கம்போடியா மக்கள் குவிந்தனர்.

நேற்று விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் டோன்லிசாப் நதிக்கரையில் வழிந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 345 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த கோர பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனக் கருதப்படுகிறது. இதில் காயமடைந்த நூற்றுக்கணக்கானோர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த இடத்தில் திடீரென நெரிசல் ஏற்படவே மக்கள் பீதியடைந்து அங்குள்ள பாலம் வழியாக வெளியேற முயன்றதால் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் அந்த இடமே மரணக் குழியாக மாறியது. மொத்தமாக கீழே விழுந்ததாலும் நெரிசலில் சிக்கி மிதிபட்டதாலும் பலர் உயிரிழந்தனர்.

பிரதமர் அதிர்ச்சி!

இச்சம்பவம் குறித்து அந்நாட்டுப் பிரதமர் ஹுன்சென் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். கடந்த 31 ஆண்டுகளில் கம்போடியாவில் ஏற்பட்ட மிகப் பெரிய சோக நிகழ்வு இதுதான் என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல