புதன், 24 நவம்பர், 2010

பிணையில் செல்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள்

ஒரு சட்டவாளர் என்ற அடிப்படையிலும் எமது பிரச்சினைகளை விளங்கிக் கொள்ளக்கூடியவர் என்ற காரணத்தினாலும் எம் அனைவருக்கும் பிணையில் செல்வதற்கு விசேட ஏற்பாடு ஒன்றைச் செய்து தரும்படி அரசியல் கைதிகளாகிய நாம் உங்களிடம் வேண்டி நிற்கின்றோம். இவ்வாறு புதிய நீதியமைச் சராக பதவியேற்றிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு தமிழ் அரசியல் கைதிகள் சார்பில் கடிதமொன்று நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பிணையில் செல்வதற்கான அனுமதியை நீங்கள் வழங்கினால் இதற்கு வேண்டிய பிணை ஏற்பாடு களைச் செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பா.அரியநேத்திரன் தயாராக இருப்பதாக ஜனாதிபதியிடம் அண்மையில் தெரிவித்திருந்தார் என்ப தையும் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகின்றோம் என இக்கடிதத் தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நீங்கள் நீதி அமைச்சராக நியமிக் கப்பட்டதை அடுத்து மகிழ்ச்சியடை கின்றோம். அத்துடன் வாழ்த்துக்க ளையும் தெரிவிக்கின்றோம்.எமது விடயத்தில் இனியாவது நியாயமான தீர்வு கிடைக்குமென நம்புகின்றோம்.உங்களால் முடிந்தளவு எமது விடயத்தில் கூர்ந்து கவனம் செலுத்தி தற்போதைய சூழ்நிலையில் பிணை யில் செல்வதற்காவது விசேட ஏற்பாடொன்றை உங்கள் தலைமையின் கீழ் ஏற்படுத்தி தாருங்கள்.

நாட்டில் தற்போது நல்ல சூழல் உருவாகி உள்ளது. நாட்டில் சகல மாகாணங்களிலும் தடையின்றி நீதி மன்ற செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. எமது நாட்டில் தற்போது அரச கட்டுப்பாடற்ற பகுதியயன ஒன் றில்லை. நாட்டின் அனைத்துப் பகுதி களிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. கடந்த காலங்களில் ஜனாதிபதி யின் தலைமையின் கீழ் வடக்குக் கிழக்கு பகுதிகளில் அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் நடைபெற்றன. இவை அனைத்தும் தேசிய பாதுகாப் பிற்கு அச்சுறுத்தல் இல்லை என்பதைக் காட்டுகின்றது.

எமது பெற்றோர்கள் சகலவற்றையும் இழந்து ஒரு சட்டத்தரணி யைக்கூட அமர்த்த முடியாமல் அவர்களிடத்தில் இருந்த எல்லாவற்றையும் இழந்துபோய் கண்ணீரே வாழ்க் கையாகி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு மேலாய் நாம் சிறையில் அனுபவிக்கின்ற வேதனைகள் உளவியல் ரீதியாக நாம் அடைகின்ற மன உளைச்சல்கள் எண்ணிலடங்க முடியாதவை. நாம் சிறையில் இருப்பதால் எமது குடும்பங்கள் மிகுந்த துன்பங் களை அனுபவித்து வருகிறார்கள் என்றும் பலமுறை அவர்களிடத்தில் முறையிட்டு இருந்தோம்.

ஆனால் இதில் எதையும் நிறைவேற்றியதாக இல்லை. ஆனால் எமது கைது தொடர் பான விபரங்களைக் கூட எம்மிடம் தான் கேட்கிறார்கள். இதுதான் இன்றைய எமது நிலை. இவை இவ்வாறு இருக்க 01.08. 2010 அன்று நீங்கள் உங்களின் தலை மை காரியாலயத்தில் வைத்து ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி யிருந்தீர்கள். அதில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூறும்போது, அரசியல் கைதிகளின் விடுதலைக் காக நான் நேரடியாக தலையிடு வேன் என்றும், சிறைச்சாலைகளுக்கு நேரடியாகச் சென்று அரசியல் கைதிகளின் விபரங்களை திரட்டி அவர்களின் விடுதலை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பு வதாக உறுதிமொழி அளித்திருந்தீர்கள். இவையனைத்தும் எமது பதிவிலிருக்கிறது.

அத்துடன் பிணையில் செல்வதற்கான அனுமதியை நீங்கள் வழங் கினால் அதற்கு வேண்டிய பிணை ஏற்பாடுகளை செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான பா.அரியநேத்திரன் தயாராக இருப்பதாக ஜனாதிபதியிடம் அண்மையில் தெரிவித்தார் என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறோம் என்றுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல