புதன், 24 நவம்பர், 2010

என் மனைவி தான் அடுத்த மகாராணி

“என் மனைவி கமீலா தான் பிரித்தானியாவின் அடுத்த மகாராணி” என பிரித்தானிய இளவரசர் சாள்ஸ் கூறியுள்ளார். அமெரிக்காவில் உள்ள என்.பி.சி, தொலைக்காட்சிக்கு பிரித்தானிய இளவரசர் சாள்ஸ் பிரத்தியேக பேட்டியளித்தார்.

தனது வாழ்க்கை முறை, இயற்கை மீதான காதல், ஊடகத்துடன் தனக்குள்ள தொடர்பு மற்றும் தனது மகன்களும், இளவரசர்களு மான ஹரி மற்றும் வில்லியம் குறித்தும் மனம் திறந்திருக்கிறார். இந்த பேட்டி இப்போது, அமெரிக்காவில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

அதில், பிரித்தானியாவின் அடுத்த மகாராணி குறித்த கேள்விக்கு சாள்ஸ் கூறியதாவது, “இன்னும் நீண்ட காலம் நான் உயிருடன் இருந்தால் நான்தான் அடுத்த மன்னர். அப்படியெனில் பிரித்தானி யாவின் அடுத்த மகாராணியாக எனது மனைவி கமீலா அறிவிக்கப்படுவார்’ என்றார். தற்போது 62 வயதாகும் சாள் சின் முதல் மனைவி இளவரசி டயானா கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 1996ல் டயானாவை விவாகரத்து செய்தார்.

அதைத் தொடர்ந்து சாலை விபத்து ஒன்றில் டயானா உயிரிழந்தார். அதன்பின் 2005ல் “கமீலா பார்க்கர் பவுல்ஸ்’ என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரித்தானிய வரலாற்றில், மன்னரின் மனைவி தான் ராணியாக அறிவிக்கப்படுவார். அவருக்கு “குயின் கான்சார்ட்’ பட்டமும் கொடுக்கப்படும். சார்ள்ஸ் மன்னராகும் போது, கமீலா மகாராணியாக அறிவிக்கப்படுவார் என இருவரின் திருமணத்தில் முடிவு செய்யப்பட்டது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல