புதன், 24 நவம்பர், 2010

என்னை விமர்சித்து வாக்குபெற முயல்கிறார் அப்பாத்துறை - இமெல்டா பதிலடி

நான் யாழ்ப்பாணத்தில் அரசாங்க உதவியுடன் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி பணிகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அப்பாத்துறை விநாயகமூர்த்தி போன்றவர்கள் தன்னைப் பற்றி விமர்சிப்பதை தொழிலாகக் கொண்டுள்ளதாக யாழ், அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துறை விநாயகமூர்த்தி இன்று பாராளுமன்றில் கூறிய கருத்திற்கு பதில் வழங்கும் முகமாகவே அவர் எமக்கு இதனைத் தெரிவித்தார். தங்களுடைய அரசியலை மேற்கொள்வதற்கு வேறு விடயங்கள் தெரியாமல் அவர்கள் தன்னை விமர்சிப்பதாக இமெல்டா சுகுமார் தெரிவிக்கின்றார்.

மேலும் யாழ்ப்பாணத்தில் அரச ஊழியர்கள் மிகவும் நேர்த்தியாகவும், அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வருவதாகவும், யாழ்ப்பாணத்தில் நீர், வீதி உள்ளிட்ட அபிவிருத்திகளுக்கு பல மில்லியம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பெண்ணாக இருந்த தான் செய்யும் இந்த வேலைத் திட்டங்களை சிலரால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை எனவும் இமெல்டா சுகுமார் குறிப்பிட்டுள்ளர்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல