புதன், 24 நவம்பர், 2010

கிருஷ்ணா வருக! எஸ்.எம். கிருஷ்ணா வருக! தமிழர் குறை தீர்க்க கிருஷ்ணா வருக!

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா எதிர்வரும் 27ந் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகிறார்.யாழ்ப்பாணத்திற்கு வரும் அவருக்கு எங்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதாக, அரங்க ஆற்றுகை நிகழ்வொன்றை நடத்துவதாக கற்பனை செய்து கொண்டோம்.

அரங்க ஆற்றுகை யாழ்ப்பாணத்தில் நடை பெறுகிறது. அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் பிரமுகர்கள் பலரும் இருக்கின்றனர். அரங்க ஆற்றுகையில் நடிப்பதற்காக ஒரு குழுவினர் தயார் நிலையில்.தயாரிப்பாளர் அந்தக் குழுவினருக்கு கண்டிப்பான உத்தரவொன்றை பிறப்பித்திருந்தார்.அது என்னவெனில், கடற்றொழில் பிரச்சினை, வலி. வடக்கில் மீள்குடியமர்வு, தூத்துக் குடி கப்பல் சேவை, சங்ககாலத்து தமிழன், பண்டார வன்னியன் பரம்பரை இப்படி பழங்கதை பேசுவதற்குப் பலரும் முந்தியடிப்பர். அதற்கு முன்னதாக நீங்கள் மேடையில் பாய்ந்து ஏறிவிடுங்கள் என்பதே அந்த உத்தரவு.

தயாரிப்பாளரின் உத்தரவை சிரமேற் கொண்ட ஆற்றுகைக்குழு, மேடையேறுகின்றது. கிருஷ்ணா வருக!...எஸ்.எம்.கிருஷ்ணா வருக... தமிழர் துயர் துடைக்க கிருஷ்ணா வருக ... இவ்விதம் பாடியவாறு இருவர் செல்ல, மேலும் இருவர் ‘துரியோதனன் சபையினிலே தூதுவந்தாய் கிருஷ்ணா, பாண்டவர் துயர் துடைக்க (தமிழர்) தூது வந்தாய் கிருஷ்ணா. முகர்ஜியால எதுவும் செய்ய முடியவில்லை கிருஷ்ணா! கருணாநிதியும் கடிதமெழுதிகளைத்து விட்டார் கிருஷ்ணா ... துச்சாதனன் சீனாவும் நுழைந்துவிட்டான் கிருஷ்ணா. உங்கள் தேசத்திற்கு சகுனியான பாகிஸ்தானும் வந்துவிட்டான் கிருஷ்ணா ... இவ்வாறு அந்த இருவரும் பாட...

மேலும் நான்கு பேர் மேடையேறுகின்றனர். தகிட..தகிட...தகிட...தாம் ...தீம்...முன்னம் ஒரு பார்த்தசாரதி வந்தார். அவர் தூதினிலே பாரதம் எடுத்தது முடிபு. வன்னியில் இப்போது நடந்த கொடூரம். வந்தார் பிரணாப் முகர்ஜி, அவர் செய்தது எதுவுமில்லை. பின்னமும் ஒரு குழு. அது டி.ஆர் பாலுவின் தலைமையில் வந்தது. அலரி மாளிகையில் ஏச்சுவேண்டிச் சென்றது சென்னை. நிருபமா அம்மையாரும் வந்தார். முடிபு ஏது மில்லை கிருஷ்ணா. எங்கள் துயர்பாரும் கிருஷ்ணா. இங்கு பிரச்சினை ஏதும் இல்லையாம். கேளும் நாவற்குழியில் இப்போ தமிழர் நாமம் போச்சு. எங்கள் அரச மரத்தில் இப்போ அந்தக் கிருஷ்ணன் இல்லை கிருஷ்ணா. புத்தனை இருத்தி புதுப் புராணம் படிக்கிறார் கேளீர். வன்னியில் எங்கள் இனம் வாடுதய்யா, வதை முகாமிலும் சாகுதையா.

பாரையா கிருஷ்ணா பாரையா. பாரதம் கை விட்டால் எங்களை காப்பது யாரய்யா?வந்த நீவிர் எமக்கு முடிபு சொல்லும் ஐயா! வெறும் வார்த்தைகள் எதுவும் வேண்டாமையா.

வலம்புரி
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல