வெள்ளி, 10 டிசம்பர், 2010

நடிகை ராக்கி சவந்தை கைது செய்ய தடை (படங்கள் இணைப்பு)

இந்தி கவர்ச்சி நடிகை ராக்கி சவந்த், ஒரு தனியார் டி.வி. சானலில் `ராக்கி கா இன்சாப்' என்ற ரியலிட்டி ஷோவை தொகுத்து அளித்து வருகிறார். இதில் வாழ்க்கையில் பிரச்சினைகளால் தவிப்போரை நேரில் வரவழைத்து பேட்டி கண்டு, தீர்வும் காணப்படுகிறது.

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்சியை சேர்ந்த வாலிபர் லட்சுமனுக்கும், அவரது மனைவி அனிதாவுக்கும் குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இதை அறிந்து அவரை `ராக்கி கா இன்சாப்' நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்து வந்துள்ளனர்.

அந்த நிகழ்ச்சியின்போது, ராக்கி சவந்த் அவரை ஆண்மையற்றவர் என்று சத்தம் போட்டு கிண்டலாக கூறினாராம்.

இதனால் அவர் மனவேதனையும், அவமானமும் அடைந்து சாப்பிடுவதை விட்டு விட்டார். என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று புலம்பி வந்தவர் மனத்தளர்ச்சி அடைந்து உயிரிழந்தார்.

இது தொடர்பாக ஜான்சியில் உள்ள பிரேம் நகர் போலீஸ் நிலையத்தில் லட்சுமனின் தாய் சாவித்திரி தேவி புகார் செய்தார். அதன்பேரில் ராக்கி சவந்த் மற்றும் 3 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 504, (அமைதியை குலைக்கும் நோக்கத்தில் அவமானப்படுத்துதல்), 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குக்கு தடை விதிக்கக் கோரி அவர் அலகாபாத் ஐகோர்ட்டில் ரிட் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் இம்தியாஸ் முர்டாசா, ராம் ஆதர் சிங் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ராக்கி சவந்தை கைது செய்வதற்கு தடை பிறப்பித்த நீதிபதிகள், அவரது வழக்கு குறித்து நான்கு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு நோட்டீசு அனுப்புமாறு உத்தரவிட்டனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல