வெள்ளி, 10 டிசம்பர், 2010

கணவனின் நாக்கை கடித்து இரண்டு துண்டாக்கிய பெண் கைது (படங்கள் இணைப்பு)

முத்தமிடும் போது தனது கணவரின் நாக்கின் அரைப்பகுதியை கடித்து துண்டாக்கிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க விஸ்கொன்ஸின் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

திங்கட்கிழமை பின்னிரவு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான செய்திகள் புதன்கிழமை சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

ஷெபோய்கன் நகரைச் சேர்ந்த 57 வயதான மேற்படி பெண், முத்தமிடுகையில் தனது கணவன் (79வயது) நாக்கை கடித்து துண்டாக்கியதையடுத்து அவசரசேவை பிரிவிற்கு அழைப்புவிடுத்துள்ளார்.

அவசர சேவைப் பிரிவினர் வந்தபோது உடையெங்கும் இரத்தக்கறையுடன் அந்த பெண் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது கடித்து துண்டாடப்பட்ட நாக்கின் பகுதியை இணைக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல