வெள்ளி, 10 டிசம்பர், 2010

அவமதிப்புக்கு ஹிலரி கிளின்டன் மன்னிப்புக் கோரினார் !

அமெரிக்காவின் மிசிசிபி விமானநிலையத்தில், பாதுகாப்பு அதிகாரிகளினால் இநத்தியத் தூதர் சோதனைக்குள்ளாக்கப்பட்டது தொடர்பில், அமெரிக்காவின் சார்பில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலரி கிளின்டன், வருத்தம் தெரிவித்துள்ளார். மிசிசிபி பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சியொன்றில் கலந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வதற்காக, அவர் சென்ற போதே குறிப்பிட்ட அச்சம்பவம் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்குச் சென்ற போது, மிசிசிபியில் உள்ள ஜாக்சன்-எவர்ஸ் விமான நிலையத்தில் வைத்து, விமான நிலைய அதிகாரிகளினால் தீவிர சோதனைக்குள்ளாக்கப்பட்டார். இச் சந்தர்ப்பத்தில் அவர், தான் இந்தியத் தூதுவர் எனத் தெரிவித்திருந்த போதும், சேலை அணிந்து வந்திருப்பதனால சோதனை நடத்த வேண்டும் என, விமான நிலைய அதிகாரிகள் கண்டிப்பாகத் தெரிவித்ததுடன், சிறப்புப் பயணிகள் ஓய்வு அறைக்கு அழைத்துச் சென்று பெண் அதிகாரிகள், சோதனை மேற்கொண்டனர். சோதனையின் பின்னர் அவரது விமானப் பயணத்திற்கு அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.

விமான நிலைய அதிகாரிகளின் இச் செயற்பாடு குறித்து இந்திய தூதரகம் சார்பில், அமெரிக்க அரசிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. இம்முறைப்பாட்டிற்குப் பதிலளித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலரி கிளின்டன், விமான நிலைய அதிகாரிகளின் நடவடிக்கையால், இந்தியத் தூதுவருக்கு ஏற்ப்பட்ட அசெளகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாமல் தடுக்க என்ன செய்யலாம் என்பபது பற்றி ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல