வெள்ளி, 10 டிசம்பர், 2010

நேரடி ஒளிபரப்பில் பெண் தற்கொலை

தாய்லாந்தை சேர்ந்த இளம்பெண் நிசா. வயது 25. கம்ப்ராக் நெட்வொர்க் என்ற சமூக இணைய தளம் மூலம் ஓர் இளைஞரை அவர் காதலித்ததாக தெரிகிறது. இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் மனக்கசப்பு ஏற்பட்டது.

வீடு திரும்பிய நிசா, கம்ப்யூட்டரை ஆன் செய்து வெப்கேமராவை இயக்கினார். மின்விசிறியில் போர்வையை கட்டி தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சி காட்சியை நேரடியாக கம்ப்ராக் நெட்வொர்க்கில் பலர் பார்த்து அதிர்ந்தனர்.

சம்பவம் பற்றி நிசா வீட்டு பணிப்பெண் கூறுகையில், ‘‘ஓர் இளைஞர் எனக்கு போன் செய்து நிசா தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பதாகவும் அதை தடுக்குமாறும் கூறினார்.

ஆனால், நிசா அறைக் கதவு பூட்டப்பட்டு இருந்ததால் என்னால் சரியான நேரத்துக்கு அறைக்குள் உள்ளே செல்ல முடியவில்லை’’ என்றார். முன்னதாக, தற்கொலை முடிவை தனது காதலருக்கு நிசா தெரிவித்ததுடன், வெப்கேமராவில் நேரடி ஒளிபரப்பு செய்யப் போவதாக கூறியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல