டெவன் நகரிலுள்ள தெய்கன்மவுத் எனும் இடத்தைச் சேர்ந்த சூஸனா ஒஸ்போம் என்ற இந்தச் சிறுமி, சில எண்களை (எண் 3 உட்பட சில எண்கள்) தீய எண்களாக கருதி, அவற்றைத் தவிர்த்து ஏனைய எண்களை எண்ணுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உளவியல் ரீதியான பாதிப்பு ஒன்றுக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவித்தனர்.
சூஸனா ஒஸ்போமின் எண்களை தொடர்ந்து எண்ணும் பழக்கத்தால் அவருடன் குடும்பத்திலுள்ளவர்களும் ஏனையவர்களும் பேசுவதை தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.
சூஸனா ஒஸ்போமிற்க்கு தற்போது தெருவில் இறந்து கிடக்கும் மிருகங்களுக்காக பிரார்த்திக்கும் புதிய பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் சூஸனா ஒஸ்போமின் தாயாரான மிராஸா லின்ட் (41 வயது) விபரிக்கையில், ““சூஸனாவின் இந்த விநோத பழக்கம் எமது குடும்பத்தையே மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது'' என்று தெரிவித்தார்.
அவருக்கு சூஸனா ஒஸ்போமை தவிர இரு மகன்மார் உள்ளமை குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக