இவர் புதிய கேபிள் டி.வி.சேனலை தொடங்க இருக்கிறார். இதற்கு `ஓன்' என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த சேனலை ஓப்ரா, டிஸ்கவரி சேனலுடன் கூட்டாக நடத்துகிறார். இதன் ஒளிபரப்பு வருகிற ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது.
மிக வெற்றிகரமான பெண்ணான இவருக்குள்ளும் ஒரு சோகம் இருக்கிறது. அது இவரை பற்றிய வதந்தியால் ஏற்பட்டது.
56 வயதான இவர் ஓரினச்சேர்க்கையாளர் என்ற வதந்தி அமெரிக்கா முழுவதும் பரவி உள்ளது. இது பற்றி ஒரு நிருபர் கேள்வி கேட்டதும் அவர் கண்களில் கண்ணீர் வடிய நான் ஓரினச்சேர்க்கையாளர் இல்லை என்று மறுத்தார். பிறகு ஏன் இப்படி ஒரு வதந்தி கிளம்பியது என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்
"நான் தொடக்கத்தில் ஒரு டி.வி.சேனலில் வேலை செய்தபோது அங்கு என்னுடன் வேலை செய்த கேய்ல் கிங் என்ற பெண்ணுக்கும் எனக்கும் சிநேகம் ஏற்பட்டது. இந்த நட்பு எங்களை ரொம்பவே பிணைத்து விட்டது. அவர் எனக்கு தாயாகவும், எல்லோரும் விரும்பும் சகோதரியாகவும், தோழியாகவும் இருக்கிறார். இவரை விட சிறந்த பெண்ணை நான் பார்த்ததில்லை'' என்கிறார் ஓப்ரா.
"நானும் அவரும் எப்போதும் ஒன்றாக இருப்பதால் எங்களுக்கு இடையே இருப்பது ஓரினச்சேர்க்கை உறவுதான் என்று மற்றவர்கள் கதை கட்டி விட்டு உள்ளனர்'' என்று வருத்தப்படுகிறார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக