வெள்ளி, 10 டிசம்பர், 2010

ஈரான் அணிக்கு மரடோனாவை பயிற்சியாளராக்க அந்த நாட்டு அதிபர் விருப்பம்

அர்ஜன்டீனா கால்பந்து ஜம்பவான் மரடோனா ஈரான் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று கடந்த ஒரு மாத காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் ஈரான் பத்திரிகை ஒன்று அதை உறுதிசெய்யும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளது. “சமீபத்தில் சிறந்த ஆசிய கால்பந்து வீரர்களுக்கு விருது வழங்கும் விழா சீனாவில் நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் ஈரான் அதிபர் மஹ்த் அகமதி நிஜாத் கலந்து கொண்டார்.

அப்போது அவர் ஈரான் அணிக்கு மரடோனா பயிற்சியாளராக வர விருப்பம் தெரிவித்துள்ளார்'' என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஆர்ஜன்டீனா இறுதிப்போட்டி வரை முன்னேற முடியாமல் வெளியேறி ஏமாற்றமளித்ததை அடுத்து அந்த அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து இவர் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல