வெள்ளி, 10 டிசம்பர், 2010

போத‌ை மருந்து கடத்திய இந்தியருக்கு மலேஷியாவில் தூக்கு தண்டனை

மலேஷியாவில்போதை மருந்து கடத்தல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இந்தியர் ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

 மலேஷியாவில் பெனாங்க சர்வதேச விமான நிலையத்தில சென்னை செல்வதற்காக சென்ற மர்ம ஆசாமி ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் கடந்த ஆண்டு ஜனவரிமாதம் 14-ம் தேதி பிடித்து விசாரணை நடத்தியதில் அவரிடம் 10 கிலோ கேட்டமைன் போதை மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து அவரிடம்நடத்திய விசா‌ரணையில் அவர் பெயர் பகுரூதீன் முகமது யுசுப் கஹானி என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக ஜியார்ஜ் டவுண் கோர்ட்டில் வழக்கு த‌ொடரப்பட்டது.

வழக்‌கைவிசாரித்த நீதிபதி முகமது அமீன்பிர்ராடூஸ் , பகரூதீனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

எனினும் பகரூதீன் தான் போதை மருந்துகடத்தவில்லை. என்றும், உடன் வந்த சக பயணி ஒருவர் ஒரு பேக்கினை கையில் கொடுத்து இதனை இந்தியாவில் உள்ள ஒருவரிடம் சேர்த்தால் 900 டாலர்கள் (ரூ.10 ஆயிரம் ) பணம் தருவதாக கூறியதால்தான் ‌பேக்கினை கொண்டு வந்ததாகவும்,அதில் போதை மருந்து இருந்தது தனக்கு தெரியாது என்றும் கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல