வெள்ளி, 10 டிசம்பர், 2010

இலங்கையில் மர்ம விமானம் அச்சத்தில் விமானப்படை!

இலங்கையில் நேற்றுக் காணப் பட்ட மர்ம விமானம் ஒன்றின் காரணமாக விமானப்படை வட்டாரங்கள் அச்சத்தில் உறைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவிசாவளையை அண்மித்த பிரதேசத்திலேயே குறித்த விமானம் தென்பட்டுள்ளது. அப்பிரதேசத்தின் கரந்தெனிய கொஹிலகெதர பிரதேசத்தில் மிகவும் தாழ்வாக பறந்த ஹெலிகொப்டர் ஒன்று தரையிறங்க முற்படுவது போன்று தென்னை மர உயரத்துக்கு தாழ்ந்து வந்துள்ளதை பிரதேசவாசிகள் பலர் கண்டிருக்கின்றனர்.

அதன் பின்னர் ஹெலிகொப்டர் திடீரென மேலெழுந்து பறந்துள்ளது. ஹெலிகொப்டர் இலங்கை விமானப்படையினரின் ஹெலி கொப்டரை ஒத்திருந்ததாக பிரதேச வாசிகள் கூறுகின்றனர். பொலிஸாரிடம் இருந்து கிடைத்த தகவலையடுத்து பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸார் விமானப் படையினருடன் தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆயினும் தங்கள் விமானம் எதுவும் அந்த பிரதேசத்தில் பறப்பில் ஈடுபடவில்லை என்று விமானப்படையினர் மறுத்துள்ளனர். அதன் காரணமாக கரந்தெனிய பிரதேசத்தில் ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளதுடன் விமானப்படையும் மர்ம விமான விவகாரத்தில் அச்சத்தில் உறைந்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல