அவர்கள் தற்போது பாங்கொக்கில் உள்ள குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலும் அவர்கள் நீதிமன்ற உத்தரவின் பின்னர் நாடுகடத்தப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது.
தாய்லாந்து தேசத்து குடிவரவு மற்றும் அடிப்படை சட்டங்களை மீறியதாகத் தெரிவிக்கப்பட்டு இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் அனைவரும் தாய்லாந்தில் இருந்து கனடாவுக்கு சட்டவிரோதமாக தப்பிச் செல்வதற்குத் தயாராக இருந்தார்கள் என புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கனடாவின் அகதிகளுக்கான சிறப்புத் தூதுவர் வார்ட் எல்கொக், தாய்லாந்து அரச தரப்புடன் மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் காணப்பட்ட இணக்கப்பாட்டின் கீழேயே அண்மைக் காலமாக தாய்லாந்தில் வைத்து இலங்கையர்கள் கைதுசெய்யப்படுவதாக த ஆசியன் ட்ரிபியூன் தெரிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக