சனி, 20 நவம்பர், 2010

காதல் அறை கேட்கும் அகதிகள்

இந்தோனேஷியாவில் மெராபி எரிமலை சீற்றத்துக்கு கிட்டத்தட்ட 250 பேர் பலியானார்கள். இந்த சீற்றத்தில் இருந்து அதை சுற்றி உள்ள பகுதிகளில் வசித்த மக்களை காப்பாற்றுவதற்காக அரசாங்கம் அவர்களை அங்கு இருந்து அகற்றி பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து உள்ளது.

கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் அகதிகளாக தற்காலிக முகாம்களிலும், கால் பந்து திடல்களிலும் கடந்த 3 வாரமாக தங்கி இருக்கிறார்கள்.

இங்கு தங்கி இருக்கும் அகதிகளுக்கு இலவச உணவு, தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. வயிற்றுப்பசி தீர்ந்தால் மட்டும் போதுமா? உணர்வுப்பசிக்கு தீனி போட வழி வேண்டாமா? அதையும் சில இளைஞர்கள் கேட்கிறார்கள். அவர்கள் தங்கி இருக்கும் முகாம்கள் அனைத்தும் தடுப்பு இல்லாமல் ஒரே கொட்டகைகளாக இருக்கின்றன. அங்கு அனைவரும் மறைப்பு இல்லாமல் படுத்து இருக்க வேண்டி உள்ளது. இதனால் இளைஞர்கள் தங்கள் மனைவியுடன் சந்தோஷமாக இருக்க முடியவில்லை.

18 வயதான அரி மார்கரெட்டாவுக்கு சமீபத்தில் தான் திருமணமானது. அவர் நிருபர்களிடம் கூறுகையில், எல்லா வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்து இருக்கிறது. ஆனால் எங்களை போன்றவர்களுக்கு தேவையான காதல் அறை தான் இல்லை. 2006-ம் ஆண்டு பூகம்பம் ஏற்பட்டபோது, அப்போது அகதிகளாக இருந்தவர்களுக்கு முதல் முறையாக அரசாங்கம் காதல் அறைகளை கட்டிக்கொடுத்தது. இப்போது அது மாதிரி எதுவும் எங்களுக்கு இல்லை என்று கூறி அவர் வருத்தப்பட்டார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல