சனி, 20 நவம்பர், 2010

கட்டாரில் இலங்கைதமிழர் கொலை

மத்திய கிழக்கு நாடான டோகா கட்டாரில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய சந்திரன் என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இறந்தவர் உட்பட நான்கு பேர் மது அருந்திக்கொண்டு இருந்தவேளை, இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக மட்டக்களப்பு நீலாவணையைச் சேர்ந்த ஒருவராலே இவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

முதலில் மது போத்தலால் தலையில் அடித்தவுடன் போத்தல் உடைந்ததும் மறுபடியும் வயிற்றில் போத்தலால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தற்பொழுது இறந்தவரின் உடல் அகமட் மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. படுகொலை செய்தவர் உட்பட மது அருந்திய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இச்சம்பவம் இடம்பெற்ற இடம் உம் சலால் அலி. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இதுபோன்ற சம்பவம் கத்தாரில் இடம்பெற்றது குறிப்பிடதக்கது.

இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் கட்டார் நாட்டுக்கு வேலை பார்ப்பதற்காக வந்திருந்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல